ஆன்மிகம்
காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் சகஸ்ரதீபம் ஏற்றி வழிபாடு நடத்திய போது எடுத்த படம்.

காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் சகஸ்ரதீப வழிபாடு

Published On 2017-11-20 05:52 GMT   |   Update On 2017-11-20 05:53 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கப் பெருமாள்கோவிலில் சகஸ்ரதீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
கார்த்திகை மாதம் என்றாலே விளக்குகள் ஏற்றி வழிபடுவது ஐதீகம். குறிப்பாக வைணவக் கோவில்களில் இம்மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி சகஸ்ரதீப வழிபாடு நடைபெறும். இதனால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் நேற்று மாலை சகஸ்ரதீப வழிபாடு நடந்தது.சகஸ்ர தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.

கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நாதஸ்வர இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் மாருதி நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News