ஆன்மிகம்

நவநீதம் எனும் வெண்ணெய்

Published On 2017-08-12 07:39 GMT   |   Update On 2017-08-12 07:39 GMT
கண்ணனுக்கு பிடித்த உணவுப் பொருள்களில் ஒன்று “நவநீதம்’ என்னும் வெண்ணெய். இதிலும் ஒரு தத்துவம் பொதிந்துள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
கண்ணனுக்கு பிடித்த உணவுப் பொருள்களில் ஒன்று “நவநீதம்’ என்னும் வெண்ணெய். இதிலும் ஒரு தத்துவம் பொதிந்துள்ளது. மோரைக் கடைந்து வெண்ணெயைத் தனியே பிரித்தெடுத்துவிட்டால் பின்னர் அதை மோரிலோ, நீரிலோ போட்டாலும் அது கரைந்து போகாது.

அதுபோல் “உலக இயல்’ என்ற மோரிலிருந்து மனம் என்ற வெண்ணெயைப் பிரித்தெடுத்து கண்ணனிடம் ஒப்படைத்துவிட்டால், பிறகு அந்த மனம் உலக இச்சைகளில் ஈடுபடாது. கண்ணனால் ஏற்கப்பட்டுவிட்ட அந்த மனம், பின்னர் அவனது நினைவிலேயே நிலைத்து நிற்கும். அத்தகைய உள்ளங்களை கண்ணன் கவர்ந்து கொள்வான். இதனாலேயே அவனை, “நவநீத சோரன்’ என்று அடியார்கள் போற்றுகின்றனர்.

Tags:    

Similar News