ஆன்மிகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலச ஊர்வலம்

Published On 2017-07-31 03:32 GMT   |   Update On 2017-07-31 03:32 GMT
நாகர்கோவில், கிருஷ்ணன்கோவிலில் யாதவர் தெருவில் உள்ள ஆதிபராசக்தி சக்திபீட கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி செவ்வாடை அணிந்த பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.
நாகர்கோவில், கிருஷ்ணன்கோவிலில் யாதவர் தெருவில் உள்ள ஆதிபராசக்தி சக்திபீட கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி செவ்வாடை அணிந்த பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது. விழாவினையொட்டி நேற்று அதிகாலையில் 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 108 மந்திரங்களுடன் சக்தி கவசம், சக்தி வழிபாடு, கூட்டு தியானம், அன்னதானம் போன்றவை நடந்தன.

பின்னர், சக்திபீட தலைவர் சின்னதம்பி தலைமையில் கஞ்சி கலச ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திர சாமிகள் முன்னிலை வகித்தார். செவ்வாடை அணிந்த ஏராளமான பக்தர்கள் கஞ்சி கலசம் ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் ராஜா மண்டபத்தில் இருந்து தொடங்கி கோவில் வரை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சக்திபீட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News