ஆன்மிகம்

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா 27-ந்தேதி நடக்கிறது

Published On 2017-07-22 03:26 GMT   |   Update On 2017-07-22 03:26 GMT
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந்தேதி ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இது ராகு-கேது தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற இந்த கோவிலில் ராகு-கேது ஏக சரீரமாகி இறைவனை நெஞ்சில் நிறுத்தி வழிபட்டு அருள்பெற்றனர் என்பது புராணவரலாறு.

கருவறையில் பாம்புடன் கூடிய லிங்க வடிவாய் இறைவன் எழுந்தருளியுள்ளார். கருவறையை சுற்றிலும் அகழிகள் உள்ளது. ராகுவும்-கேதுவும் கோவில் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். இந்த கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழாவையொட்டி வருகிற 27-ந்தேதி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

26-ந்தேதி காலை முதற்காலம், விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. 27-ந்தேதி மதியம் 12:48 மணிக்கு ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடகராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம்பெயரும் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 28-ந்தேதி ஏகதின லட்ச்சார்ச்சனையுடன் விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News