ஆன்மிகம்

சிறப்பு வாய்ந்த நடனமாடும் தெய்வங்கள்

Published On 2017-07-12 09:52 GMT   |   Update On 2017-07-12 09:52 GMT
சில சிறப்பு வாய்ந்த ஸ்தலங்களில் உள்ள இறைவன் நடனமாடும் கோலத்தில் காட்சி தருவார்கள். இன்று அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்களை பற்றி பார்க்கலாம்.
* வாதாபி, மதுரை ஆகிய தலங்களில் நடனமாடும் கணபதியை தரிசனம் செய்யலாம்.

* திருப்போரூரில் முக மண்டபத்தை ஒட்டிய தூணில் முருகப்பெருமான் நடனம் புரிந்தபடி காட்சியளிக்கிறார்.

* மைசூர் அருகே உள்ள நூக்குஹள்ளி என்ற தலத்தில் மகாலட்சுமி, எட்டுக் கரங்களுடன் நடனமாடிய தோற்றத்தில் காணப்படுகிறார்.

* ஆந்திர மாநிலம் பனகல் பச்சல சோமேஸ்வரர் ஆலயத்தில், கால பைரவர் விக்கிரகம் நடனமாடும் அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.

* கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் சுவாமி சன்னிதி வாசல் தூணில் வலது புறம் நடனமாடும் கோலத்துடன் வீரபத்திரர் காட்சி தருகிறார்.

திருவாரூர் திருக்கோவிலில் சுவாமி புறப்பாட்டின் போது மத்தளத்தைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு வாசிப்பது வழக்கமாகும். இந்த நடைமுறை ‘பூத நிருத்தம்’ என்று கூறப்படுகிறது. இங்கு தியாகேசப் பெருமானுக்கு 18 வகை வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.
Tags:    

Similar News