ஆன்மிகம்

சிரிப்பது போல் காட்சி தரும் பெருமாள்

Published On 2017-06-27 09:26 GMT   |   Update On 2017-06-27 09:26 GMT
கோயம்பேடு அருகில் உள்ள நெற்குன்றத்தில் 400 ஆண்டுகள் பழைமையான கரிவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பெருமாள் சிரிப்பது போல் காட்சி தருகிறார்.
சென்னை கோயம்பேடு அருகில் உள்ள நெற்குன்றத்தில் 400 ஆண்டுகள் பழைமையான கரிவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. கோயில் அர்ச்சகர் கருவறையின் மின்சார விளக்குகளை முழுமையாக அணைத்துவிட்டு, நெய் விளக்கு ஆரத்தியை பெருமாளின் முகம் அருகே காட்டும்போது பெருமாளின் கண்கள் இரண்டும் திறந்து கண்ணின் மணிகள் உருள ஆரம்பிக்கின்றன.

சாதாரணமாக இந்த பெருமாளின் முன் நின்று பார்க்கும்போது பெருமாளின் கண்கள் மூடியிருப்பதுபோல் தெரிகிறது. இருளில் நெய்விளக்கு ஆரத்தி காட்டும்போது மட்டும் கண் இமைகள் மெல்ல திறந்து விழிகள் இரண்டிலும் ஆரத்தி ஒளி பட்டு பிரதிபலிக்கிறது. அச்சமயம், பெருமாளின் முகமே சிரிப்பது போல தெரிகிறது.
Tags:    

Similar News