ஆன்மிகம்

மல்லிகார்ஜூனசாமி கோவில் கும்பாபிஷேகம் 28-ந்தேதி நடக்கிறது

Published On 2017-06-26 03:03 GMT   |   Update On 2017-06-26 03:03 GMT
மேச்சேரி அருகே கோவில் வெள்ளார் மல்லிகார்ஜூனசாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது.
மேச்சேரி அருகே கோவில்வெள்ளார் மரகதவல்லி அம்பாள் சமேத மல்லிகார்ஜூனசாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள்(புதன்கிழமை) நடக்கிறது. இந்த விழா இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணியளவில் மகாகணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. மதியம் 2 மணியளவில் கைகாட்டிவெள்ளாரில் இருந்து புனிததீர்த்தம் எடுத்து வருதலும், மாலை 6 மணிக்கு கங்கணம்கட்டுதல், முதற்காலயாக பூஜையும் நடைபெறுகிறது. இரவு 6 மணியளவில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

நாளை(செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், கஜபூஜையும், கோபூஜையும், மதியம் 12 மணிக்கு அனைத்து சாமிகளுக்கும் அஷ்டபந்தனம் சாற்றுதல், பிரதிஷ்டை செய்தலும், மாலை 6.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும் நடைபெறுகிறது.

நாளைமறுநாள் காலை 7 மணிக்கு நான்காம் காலயாக பூஜையும், காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகாஅபிஷேகம், தசதானம், தசதரிசனம் நடைபெற்று சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ மல்லிகார்ஜூனசாமி இறையருள் நற்பணி மன்றம் மற்றும் வெள்ளார் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News