ஆன்மிகம்
கும்பாபிஷேகம் நடைபெற்ற உத்தங்குடி கோவில்.

உத்தங்குடி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-06-16 05:31 GMT   |   Update On 2017-06-16 05:31 GMT
மதுரை மாட்டுத்தாவணியை அடுத்த உத்தங்குடியில் 90 ஆண்டுகள் பழமையான மருகாலுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாட்டுத்தாவணியை அடுத்த உத்தங்குடியில் 90 ஆண்டுகள் பழமையான மருகாலுடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் தற்போது புதுப்பிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவினையொட்டி, அய்யனார் சேமங்குதிரைக்கு கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, எஜமானர் சங்கல்பம், யாகபூஜைகள் நடந்தன.

தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சுவாமிகளுக்கும், சேமங்குதிரைக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த சமயத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதனை கண்ட பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விழா ஏற்பாடுகளை பரமகுரு அய்யணன் அம்பலம் வகையறாக்கள், மரியாதைக் காரர்கள் செய்திருந்தனர்.

விழாவில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாண்டி அம்பலம், தொழில் அதிபர் ரவிச்சந்திரன் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News