ஆன்மிகம்

ஆலயங்களில் பக்தர்கள் ‘ஹரஹரா’ என்று கோஷம் போடுவது ஏன்?

Published On 2017-05-29 10:13 GMT   |   Update On 2017-05-29 10:13 GMT
ஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவார்கள். அதற்காக விரிவான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
மனிதனுக்கு துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, அதை வெளிபடுத்த பலவித ஒலிகளை பயன்படுத்துவார்கள். மனிதன் என்று மட்டுமில்லை, விலங்குகளும் குறிப்பாக குரங்குகள் 162 வகை ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பக்தி பெருக்கெடுத்து, உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும் போது தான் இந்த அரஹரா கோஷம் செய்யப்படுகிறது. கோஷத்தை கேட்பவர்கள் கூட பக்தி உணர்ச்சிக்கு ஆட்படலாம்.

ஹர என்ற சொல் பாவங்களை போக்குதல் என்று பொருள்படும். ஹர ஓம் ஹர என்பது தான் மறுவி தமிழில் ஹரஹரா என்று அமைந்து இருக்கிறது. இந்த ஒலியை கூட்டமாக சேர்ந்து எழுப்புவதனால் மனமானது தூய்மையடைகிறது.

Tags:    

Similar News