- அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையில் அவர் ஒளியுடன் கீழ் வானத்தில் காட்சியளிப்பார்.
- அதிகாலை நேரத்தில் கிழக்கில் உள்ள வெள்ளியை எதிர்த்து பிரயாணம் செய்யக்கூடாது என்பர்.
நான்கு கரங்கள் உடையவர். அவற்றில் கமண்டலம், அட்சமாலையும், தண்டமும், தாங்கியவர்.
இவருடைய வெள்ளித் தேரில் எட்டு குதிரைகள் பூட்டப்பெற்றுள்ளன.
பத்து குதிரைகள் தேரை இழுப்பதாகவும் சில நூல்கள் கூறுகின்றன.
இவர் மீன ராசியில் உச்சமடைகிறார்.
ரிஷபம், துலாம் இவரது ஆட்சி வீடு.
பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களுக்கு அதிபதி.
தசை புத்திகளில் இவருக்குத்தான் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் உள்ளது.
ஆங்கில எண்ணில் 6க்கு அதிபதி 6, 15, 24ந் தேதியில் பிறந்தவர்களுக்கு இவரே அதிபதி.
சுக்கிரன் 'வெள்ளி' என்றும் குறிப்பிடப் படுகிறது.
அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையில் அவர் ஒளியுடன் கீழ் வானத்தில் காட்சியளிப்பார்.
அதிகாலை நேரத்தில் கிழக்கில் உள்ள வெள்ளியை எதிர்த்து பிரயாணம் செய்யக்கூடாது என்பர்.
மேற்கில் சிறிதுதூரம் சென்று பின்னர் கிழக்கில் பயணிப்பதும் சிலர் வழக்கம்.
கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூரில் சுக்கிர பகவானுக்குரிய திருத்தலம் அமைந்துள்ளது.