ஆன்மிகம்
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம்

Published On 2017-04-29 06:44 GMT   |   Update On 2017-04-29 06:44 GMT
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சைவ வைணவ திருத்தலமாகும். இந்த கோவிலில் ஆடித்தவசு திருவிழா, சித்திரை திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆடித்தவசு திருவிழா, சித்திரை திருவிழா, திருவாதிரை திருவிழா ஆகிய திருவிழாக்களில் காலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் விநாயகர் தேர் கடந்த 25 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருந்தது.



இதனால் விநாயகர் தேர் கடந்த 25 ஆண்டுகளாக ஓடவில்லை. மேலும் விநாயகர் தேரோட்டம் ஒவ்வொரு திருவிழாக்களிலும் நடைபெற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய தேர் செய்ய ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று நேற்று காலை 6 மணிக்கு மேல் ரத வீதிகளில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் பொன் சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
Tags:    

Similar News