கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க நியூயார்க் புறப்பட்டு சென்ற இந்திய அணி

Published On 2024-05-26 04:54 GMT   |   Update On 2024-05-26 04:54 GMT
  • விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை.
  • கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அமெரிக்கா செல்லவில்லை.

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.

கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், ஜடேஜா, சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் முதல் கட்டமாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை. அடுத்தக்கட்ட வீரர்களுடன் அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அதனால் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் இன்று அமெரிக்கா செல்லவில்லை.

இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது மற்றும் ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News