சினிமா

கந்துவட்டிக்காரனை விட அரசியல்வாதிகளும், பதவியில் இருப்பவர்களுமே அயோக்கின்: இயக்குநர் சுசீந்திரன் காட்டம்

Published On 2017-10-24 07:55 GMT   |   Update On 2017-10-24 07:55 GMT
கந்துவட்டிக் கொடுமையால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, அரசியல்வாதிகளும், பதவியில் இருப்பவர்களுமே அயோக்கியன், மோசமானவன் என்று இயக்குநர் சுசீந்திரன் தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ளார்.
கந்து வட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் இசக்கிமுத்துவின் மனைவி, இரண்டு மகள்கள் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இசக்கிமுத்து உயிருக்கு போராடி வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கொலைகாரன் என்று தலைப்பு வைத்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

`கந்துவட்டி ஒரு பாவச்செயல்
கந்துவட்டி ஒரு பெருங்குற்றம்
கந்துவட்டி ஒரு மனிதநேயமற்ற செயல்
கந்துவட்டி  கொலைகக்கு நிகரான செயல்

கந்துவட்டிக்காரன்
மனித உணர்வுகளையும்
மனித உயிர்களையும்
உறியும் ஒரு அட்டைப்பூச்சி

இவனை விட மோசமானவன்,
அயோக்கியன்,
யார் என்றால்
இவர்களை பாதுகாக்கும்
அரசியல்வாதிகளும் பதவியில் இருப்பவர்களும் தான்'

இவ்வாறு சுசீந்திரன் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Tags:    

Similar News