சினிமா

விஜய்க்கு பிறகு அமீர்கான், சல்மான்கான் படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Published On 2017-10-09 08:25 GMT   |   Update On 2017-10-09 08:26 GMT
விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கிய பிறகு அடுத்ததாக அமீர்கான், சல்மான்கான் படங்களை இயக்குவேன் என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருக்கிறார்.
மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்து இந்தி படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். இதுபற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகிறார்..

பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பது சாதாரண வி‌ஷயம் அல்ல. விஜய், சூர்யா, மகேஷ்பாபு, அமீர்கான் படங்களை இயக்கினால் அவர்களுடைய ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். எனது முத்திரையும் படத்தில் இருக்க வேண்டும்.

நானும் அமீர்கானும் ஒரே ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் இருந்தோம். அப்போது நான் அவரை சந்தித்து பேசினேன். மீண்டும் சேர்ந்து படம் பண்ணுவது என்று முடிவு செய்திருக்கிறோம். எனக்கும் அமீர்கானுக்கும் ஏற்றபடி கதை எழுதி முடித்த பிறகு படத்தை தொடங்குவோம். ஆனால் அது ‘ஸ்பைடர்’ ரீமேக் அல்ல.



இதுபோல், ஆந்திராவில் சல்மான்கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, மகேஷ்பாபு நடித்த படத்தில் அவரை நடிக்க வைக்க முடியாது. அவருக்கு புதிய கதையில் ஒரு படம் எடுப்பேன். ‘அகிரா’ படத்தை இயக்கினேன். அதன் கதையை நான் எழுதவில்லை. மற்றவர்களுடைய கதை, திரைக்கதையை நான் இயக்குவது எனக்கு வசதியாக இல்லை. ‘பாகுபலி’ போன்ற சரித்திர சாயல் படம் எனக்கு ஒத்துவராது”.

இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News