சினிமா

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது: நடிகர் பிரசன்னா பேட்டி

Published On 2017-09-24 11:34 GMT   |   Update On 2017-09-24 11:44 GMT
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது: நடிகர் பிரசன்னா பேட்டிநடைமுறை அரசியல் மக்களை கஷ்டப்படுத்துகிறது. கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று நடிகர் பிரசன்னா கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால், பிரசன்னா நடிப்பில் வெளியாகி உள்ள துப்பறிவாளன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் ஓடும் தியேட் டர்களுக்கு படக்குழுவினர் சுற்றுபயணம் செய்துநேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

கோவையில் தியேட்டர்களை நேரில் பார்வையிட்ட பின்னர் நடிகர் பிரசன்னா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மாற்று அரசியல் வேண்டும் துப்பறிவாளன் படம் தமிழகம் முழுவதும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிடெக்டிவ் சம்பந்தப்பட்ட கதைக்காக சில காவல்துறை நண்பர்கள் உதவி செய்தனர். இணையதளத்தில் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுபவர்கள் திருடர்கள்.

அவர்கள் மற்றவர்களின் உழைப்பை திருடி வாழ்கிறார்கள். தமிழகத்தில் மாற்று அரசியல் வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் மக்களை கஷ்டப்படுத்துகிறது. தற்போதைய அரசியல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவில்லை. அரசு சார்ந்த எந்த துறையும் சரியாக இயங்கவில்லை. குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ துறையில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



மத்திய அரசும், மாநில அரசும் ஒரே போக்கில் செயல் படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

டைரக்டர் மிஷ்கின் கூறியதாவது:- ஒரு ஆண்டாக கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன். தியேட்டர்களில் படத்தை பார்த்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். திருட்டு வி.சி.டி.யில் படம் பார்ப்பவர்களை தடுக்க முடியாது.

தொழில்நுட்பங்களில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி திருட்டு வி.சி.டி.க்கள் மூலமாக படங்கள் வெளி வருகிறது. அதையும் மீறி தியேட்டர்களில் படம் பார்க்கத் தான் மக்கள் விரும்புவார்கள். தியேட்டரில் பார்க்கும் அனுபவம் சிறிய மானிட்டரில் பார்க்கும் போது கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News