சினிமா

அனிதா மரணத்தை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்: விஷால் பேச்சு

Published On 2017-09-04 08:50 GMT   |   Update On 2017-09-04 08:50 GMT
அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விஷால், அனிதா மரணத்தை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
‘நீட்’ தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனிதா மரணத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்தனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு பிறகு இந்த சம்பவம் திரை உலகினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மாணவி அனிதா மரணம் குறித்து நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினி காந்த், சிவகுமார், விஷால், பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர்கள் பா.ரஞ்சித், ராம், அமீர் உள்பட தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மத்திய- மாநில அரசுகளையும் கண்டித்தனர்.

இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் நேற்று மாலை மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் நடிகர்கள், இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவி படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். ஏராளமான மாணவ - மாணவிகளும் இதில் கலந்து கொண்டனர்.



பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் நடிகர்கள், இயக்குனர்கள் உள்பட பலர் பேசினார்கள்.

தங்கை அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. தன்னைப் போல மற்ற மாணவ- மாணவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நீதிமன்ற படிகளில் ஏறி போராடியவர். மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வார்கள். அல்லது மறந்து விடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்.

வரும் தேர்தலில் இலவசங்களை எதிர்பார்க்க கூடாது. அனிதாவின் மரணத்தை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும்.

மருத்துவம் படிக்க முடியாத, பொது தேர்வுக்கு பயிற்சி பெற பணம் இல்லை என்று மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். என்னை தொடர்பு கொண்டால் எப்போதும் உதவ தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு விஷால் பேசினார்.

வீட்டில் உள்ள சிறுவர்கள் சினிமாவை தெரிந்து கொள்வதை விட, அரசியலை அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நாம் அரசியலை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நாம் போராடி, போராடி அரசுக்கு போராட்டம் என்றால் சலிப்பு தட்டிவிட்டது. இனி அனைவரும் ஒன்று கூடி போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News