சினிமா

மோசடி வழக்கில் கைதான நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் பெங்களூரு சிறையில் அடைப்பு

Published On 2017-06-29 05:31 GMT   |   Update On 2017-06-29 05:31 GMT
மோசடி வழக்கில் கைதான நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் டெல்லியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு குறைந்த வட்டியில் வங்கியில் ரூ.500 கோடி கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.10 கோடி கமிஷன் பெற்றதாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இருப்பினும், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி கோர்ட்டில் ஆஜராகாததால் கடந்த மார்ச் மாதம் மீண்டும் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்த நிலையில், பெங்களூரு தொழில்அதிபர் மன்சூர் ஆலம், அவருடைய தம்பி சாஜத் வாகப் ஆகியோருக்கு வங்கியில் ரூ.30 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.1 கோடியை ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் மோசடி செய்ததாக பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவானது.

இதுதொடர்பாக பெங்களூரு ஐகிரவுண்டு போலீசார் டெல்லி கோர்ட்டில் அனுமதி பெற்று அவரை கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவரை பெங்களூரு 4-வது கூடுதல் முதன்மை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News