என் மலர்

  நீங்கள் தேடியது "Powerstar Srinivasan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார். #PowerstarSrinivasan
  தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் குடியுரிமை தேசிய கட்சி சார்பில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிடுகிறார். நேற்று அவர், சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வாகன பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்தார்.

  பின்னர் நிருபர்களிடம் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாவது,

  தேர்தலுக்காக மக்களை நேரடியாக சந்திக்கும் பிரசாரத்தை நாளை (இன்று) முதல் தொடங்க இருக்கிறேன். நான் மக்களையும், கடவுளையும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன். அதிகமான வாக்குகள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். என்னை பிரசாரம் செய்யவிடாமல் யாரும் தடுக்கவில்லை. எங்கள் கட்சி தலைவர் வந்த பிறகு பிரசாரம் தொடங்கலாம் என்று இருந்தேன். நடிகர் ரஜினிகாந்த், பா.ஜனதா தேர்தல் அறிக்கையை பாராட்டி தனது சொந்த கருத்தை கூறியுள்ளார்.   ஆதரவு கொடுப்பதும், கொடுக்காததும் அவரது விருப்பம். அரசியலுக்கு வர அவருக்கு பயம் இல்லை. நல்ல கருத்துகளை அவர் வெளிப்படுத்துகிறார். சொல்லாமலேயே நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன், ரஜினிகாந்தும் விரைவில் வருவார். தமிழக மக்களிடம் சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் (எனக்கும்) எதிர்பார்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். #PowerstarSrinivasan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்திய குடியரசு கட்சி சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #PowerstarSrinivasan
  பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து இருக்கிறார். தென் சென்னை தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். 

  மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.  இது குறித்து அவர் கூறும்போது, “1½ ஆண்டுகளுக்கு முன்பே நான் இந்திய குடியரசு கட்சியில் (அத்வாலே) இணைந்து விட்டேன். தற்போது கட்சியின் துணைத்தலைவராக உள்ளேன். இந்த தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற உள்ளேன். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன். மற்ற நடிகர்களை போல் பதுங்காமல், நான் துணிந்து களம் காண்கிறேன். இந்த பவர்ஸ்டாரை மக்கள் ஆதரிப்பார்கள்” என்றார். #LokSabhaElections2019 #PowerstarSrinivasan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.90 லட்சம் பணத்துக்காக தனது மனைவி கடத்தப்பட்டதாக பவர் ஸ்டார் சீனிவாசனின் போலீசில் புகார் அளித்த நிலையில், ஊட்டியில் வைத்து ஜூலியை போலீசார் மீட்டனர். #PowerStarSrinivasan #Julie
  சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் பவர்ஸ்டார் சீனிவாசன். ‘லத்திகா’, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

  கடந்த 6-ந்தேதி பவர்ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது நிலம் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக பவர்ஸ்டார் சீனிவாசன் மனைவியிடம் கூறாமல் ஊட்டி சென்றதாகவும், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மனைவி ஜூலி கையெழுத்து போட வேண்டியிருந்ததால் அவரையும் ஊட்டிக்கு வரும்படி அழைத்து சென்றதும் தெரியவந்தது.

  ஜூலி போலீசுக்கு தெரிவிக்காமலேயே ஊட்டிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டபோது ஊட்டியில் நிலம் பத்திரப்பதிவு முடித்து விட்டு சென்னை திரும்பி விடுவதாக தெரிவித்தார்.

  இந்த நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசனின் மகள் வைஷ்ணவி, தனது தந்தை - தாய் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர்களை யாரோ கடத்தி வைத்திருப்பதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

  ஆனால் போலீசார், வைஷ்ணவி பள்ளி மாணவி. அவருக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

  இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று சென்னை திரும்பினார். ஆனால் அவரது மனைவி ஜூலி ஊட்டியிலேயே தங்கியிருந்தார்.  சில வேலைகள் இருப்பதாகவும் வேலை முடிந்ததும் சென்னை வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதனால் பவர்ஸ்டார் சீனிவாசன் பற்றிய பரபரப்பு முடிந்துவிட்டதாக கருதப்பட்டது.

  ஆனால் சென்னை திரும்பியது தொடர்பாகவும், மனைவி ஊட்டியில் இருப்பது தொடர்பாகவும் வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் உடனே போலீஸ் நிலையத்துக்கு வந்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே இதில் மர்மம் நீடித்தது.

  இந்த நிலையில் நேற்று இரவு பவர்ஸ்டார் சீனிவாசன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

  கடந்த 3-ந் தேதி சினிமா மக்கள் தொடர்பு அதிகாரி பிரித்தி என்னை தொடர்பு கொண்டு புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக தங்களிடம் பேச வேண்டும் என்றும் தயாரிப்பாளர் கோவையில் இருப்பதாகவும் கூறினார்.

  இதையடுத்து நான் தயாரிப்பாளரை சந்திப்பதற்காக 5-ந் தேதி கோவை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றேன். அப்போது நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு திடீரென வந்த பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஆலம் மற்றும் 9 பேர் கும்பல் நீ கொடுக்க வேண்டிய 90 லட்சம் ரூபாய் பணத்திற்காக ஊட்டியில் உள்ள உன்னுடைய வீட்டை உடனடியாக எனக்கு பத்திரம் செய்து கொடு என்று கூறி என்னை மிரட்டினர். 6-ந் தேதி என்னை காரில் வைத்து ஊட்டிக்கு அழைத்து சென்றனர்.  உன் மனைவி ஜூலியை போனில் தொடர்பு கொண்டு உடனே ஊட்டிக்கு வரச் சொல் என்றும் கூறினார்கள். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரால் தனியாக வர இயலாது என்று கூறினேன். அவரை கோயம்பேடு பேருந்து நிலையம் வரச் சொல்லி காரில் ஊட்டிக்கு கடத்தி வந்து ஓட்டல் அறையில் அடைத்து சிறைவைத்து உள்ளனர்.

  நான் என்னுடைய பிள்ளைகளை பார்ப்பதற்காக நேற்று சென்னை திரும்பி வந்தேன். கடத்தி வைக்கப்பட்டுள்ள என் மனைவி ஜூலியை பத்திரமாக மீட்டு பிரித்தி, ஆலம், செல்வின் மற்றும் 8 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

  இந்த புகார் தொடர்பாக அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகர் உத்தரவின் பேரில் கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர் தலைமையில் ஜூலியை மீட்க தனிப்படை போலீசார் ஊட்டிக்கு விரைந்தனர். அங்குள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்து ஜூலியை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

  இந்த நிலையில் ஊட்டியில் சிறைவைக்கப்பட்ட ஜூலியை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். #PowerStarSrinivasan #Julie

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கடத்தப்பட்டு ஊட்டியில் இருப்பதாக தகவல் கூறப்பட்ட நிலையில், தனது அப்பா கடத்தப்பட்டதாக சீனிவாசனின் மகள் தெரிவித்துள்ளார். #PowerStarSrinivasan
  நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

  கடந்த 5-ந்தேதி மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

  அதில், “நண்பரை பார்க்க சென்ற எனது கணவர் திரும்பவில்லை. மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை அவர்கள் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்” என்று கூறி இருந்தார்.

  இதனால் பவர்ஸ்டார் சீனிவாசனை மர்ம கும்பல் கடத்தி சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுவதாக தகவல் வெளியானது.

  பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ஏற்கனவே மோசடி புகார்கள் உள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைதாகி இருந்தார்.

  இதற்கிடையே பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

  இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பவர்ஸ்டார் சீனிவாசனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசும்போது ஊட்டியில் இருப்பதாக தெரிவித்தார். அங்குள்ள பங்களாவை விற்பனை செய்வது தொடர்பாக அவர் சென்றுள்ளார். அவர் ஊட்டியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து சென்னைக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளதால் பொறுமையாக இருக்கிறோம் என்றனர்.  படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பவர்ஸ்டார் சீனிவாசன் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். தேனியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

  தேனியில் பலர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். இதுபோன்ற கந்துவட்டி கும்பலிடம் பவர்ஸ்டார் சீனிவாசன் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் அவரை அக்கும்பல் கடத்தி சென்றுவிட்டதாகவும் ஊட்டியில் உள்ள பங்களாவை தங்களது பெயருக்கு மாற்றி தரும்படி மிரட்டி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனின் மகள் வைஷ்ணவி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  5-ந்தேதி காலை எனது தந்தையை போலீஸ்காரர்கள் என்று கூறி சிலர் ஒரு ஓட்டலுக்கு கூட்டி சென்றதாக டிரைவர் எனது தாயிடம் கூறினார்.

  உடனே அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாலை தந்தை செல்போனில் தொடர்பு கொண்டு எனது அம்மாவை ஒரு மருத்துவமனை அருகே வரச்சொன்னார். அங்கு சென்ற எனது அம்மாவிடம் சிலர் சொத்து விபரங்களை வாய்ஸ் ரெக்கார்டிங் செய்துவிட்டு இரவு 9 மணி அளவில் தந்தையை அனுப்புவதாக கூறி உள்ளனர்.

  ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை தந்தையை ஊட்டிக்கு அழைத்து செல்வதாக கூறி அம்மாவிடம் கூறி உள்ளனர். அவரை அங்கு வரசொல்லி விமான பயண டிக்கெட் போட்டு கொடுத்தனர்.  அங்கு சென்ற அம்மாவும் தந்தையும் என்னிடம் மிகவும் பயத்துடனும், பதட்டத்துடனும் பேசினர்.

  பெங்களூரில் உள்ள ஒருவரிடம் தந்தை கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக அவர்கள் தந்தையை கடத்தி இருக்கலாம் என போலீசில் புகார் அளித்தோம்.

  அப்போது போலீசார் இரவு ஊட்டி செல்லலாம் என்று கூறினார்கள். ஆனால் அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இவ்வாறு அவர் கூறினார். #PowerStarSrinivasan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். #PowerStarSrinivasan
  தமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது.

  சென்னை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.

  இதுதொடர்பாக சீனிவாசனின் மனைவி ஜூலி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலையில் புகார் செய்தார். அதில் தனது நண்பரை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கணவரை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  மர்ம நபர்கள், செல்போனில் தொடர்பு கொண்டு கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை தங்களது பெயருக்கு மாற்றி தரச்சொல்லி மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

  பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் நடித்து வந்த போதிலும் மோசடி வழக்குகளிலும் தொடர்ந்து சிக்கி வந்தார். ஒருமுறை கைதாகி திகார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். கடன் பிரச்சினையும் அவருக்கு இருந்து வந்துள்ளது. அதில் இருந்து மீள்வதற்காக சீனிவாசன், தேனியை சேர்ந்த சிலரிடம் அவர் அதிக அளவில் பணம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கடத்தப் பட்டிருக்கலாமோ? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  இதனை உறுதி செய்யும் வகையிலேயே போலீஸ் புகாரும் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பவர்ஸ்டார் சீனிவாசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சீனிவாசன் செல்போனை எடுக்கவில்லை. இதன் பிறகே போலீசில் புகார் அளித்துள்ளனர்.

  சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போனில் பேசிவிட்டோம் என்றும், அவர் இருக்கும் இடம் தெரிந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

  ஊட்டியில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமாக பங்களா உள்ளதாகவும், அதனை விற்பனை செய்வதற்காகவே சீனிவாசன் அங்கு சென்றிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

  இதுபற்றி அறிந்து கொள்வதற்காக சீனிவாசனை செல்போனில் தொடர்பு கொண்டபோது பதட்டத்துடன் பேசியது போல தெரிந்தது. ஹலோ என்று கூறிய பவர்ஸ்டார் பிறகு பேசுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

  எனவே அவர் கடன் காரர்களின் பிடியில் சிக்கி இருக்கலாமோ? என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீனிவாசனுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். #PowerStarSrinivasan

  ×