சினிமா

சூப்பர்ஸ்டார் பாணியில் மலேசியாவில் கலக்கிய சிவகார்த்திகேயன்

Published On 2017-05-24 07:00 GMT   |   Update On 2017-05-24 07:00 GMT
மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், மலேசியாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, சூப்பர்ஸ்டார் ரஜினியின் பாணியை பின்பற்றி இருக்கிறார்.
ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு பெற்ற ‘தனிஒருவன்’ படத்துக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. 2-ம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. ஏப்ரல் 25-ந்தேதி ஆரம்பமான இந்த படப்பிடிப்பு 25 நாட்களுக்கும் மேலாக நடை பெற்று முடிவடைந்தது.

மோகன்ராஜா ஏற்கனவே இயக்கிய ‘எம்குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘தில்லாலங்கடி’ ஆகிய படங்கள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன. இப்போது ‘வேலைக்காரன்’ படத்தையும் மலேசியாவில் படமாக்கி இருக்கிறார்.



இது பற்றி டுவிட்டரில் கூறியுள்ள இயக்குனர் மோகன் ராஜா, ‘என் அபிமான மலேசியாவில் நான் படமாக்கிய 3-வது படம் இது. மிகவும் வெற்றிகரமாக படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இங்கு எப்போதும் போல் அன்பான உபசரிப்பு. அன்பு தமிழ் மக்களுக்கு எனது நன்றி’ என்று தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு இடையே சூப்பர் ஸ்டார் ரஜினி பாணியில், சிவகார்த்திகேயன் மலேசியாவில் உள்ள அவரது ரசிகர் மன்றத்தினரை சந்தித்தார். அப்போது அவர்கள் குடும்பத்துடன் வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவை இணைய தளங்களில் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News