ஆட்டோமொபைல்

யமஹா FZ-S FI இந்தியாவில் வெளியானது

Published On 2018-01-12 11:27 GMT   |   Update On 2018-01-12 11:27 GMT
யமஹா நிறுவனத்தின் FZ-S FI பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

யமஹா நிறுவனத்தின் FZ-S FI பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் இந்தியவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய யமஹா FZ-S FI இந்தியாவில் ரூ.86,042 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

யமஹா FZ-S FI மாடலில் 220 மில்லிமீட்டர் ஹைட்ராலிக் ஒற்றை பின்புற டிஸ்க் பிரேக், முன்புறம் 282 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய மாடலில் 10-ஸ்போக் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் 5-ஸ்போக் அலாய் வீல் வழங்கப்பட்டது.

இத்துடன் யமஹா FZ-S FI மாடல் புதிய அர்மடா புளூ நிறத்தில் கிடைக்கிறது. நாட்டின் அனைத்து யமஹா விற்பனை மையங்களிலும் புதிய FZ-S FI வி்ற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடலிலும் 149சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த இன்ஜின் 12.9 பி.எச்.பி. பவர், 12.8 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட யமஹா FZ சீரிஸ் இந்தியாவில் பிரபல மாடலாக இருக்கிறது. இந்தியாவில் யமஹா FZ-S FI மோட்டார்சைக்கிள் சுசுகி ஜிக்சர், பஜாஜ் பல்சர் NS 160, ஹோன்டா சிபி ஹார்னெட் 160R உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

முன்னதாக யமஹா நிறுவனத்தின் YZF R3 சில காஸ்மெடிக் மாற்றங்களுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. யமஹா YZF-R3 மாடலில் 321 சிசி பேரலெல் டுவின், ஃபியூயல் இன்ஜெக்டெட், லிக்விட் கூல்டு இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 41.3bhp, 29.6Nm செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
Tags:    

Similar News