பைக்

கோப்புப்படம் 

இதுவரை வெளியானதிலேயே சக்திவாய்ந்த பல்சர் பைக் - டீசர் வெளியீடு

Published On 2024-04-23 12:53 GMT   |   Update On 2024-04-23 12:53 GMT
  • பல்சர் ns200 சீரிசை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கலாம்.
  • ரிடியூன் செய்யப்பட்ட வெர்ஷன் வழங்கப்படலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இதுவரை தான் உருவாக்கியதிலேயே அதிக சக்திவாய்ந்த பல்சர் மோட்டார்சைக்கிள் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பல்சர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை பஜாஜ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது.

அந்த வகையில் பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த பல்சர் மோட்டார்சைக்கிள் மே 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பல்சர் மோட்டார்சைக்கிளின் திறன் எப்படி இருக்கும் என்பது டீசரில் தெரியவந்துள்ளது. இந்த பைக் பல்சர் ns200 சீரிசை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய பல்சர் பைக்கில் கே.டி.எம். 390 டியூக் அல்லது டாமினர் 400 மாடல்களில் உள்ள என்ஜினின் ரிடியூன் செய்யப்பட்ட வெர்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ஜின் எதுவாயினும், அதன் திறன் 40 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

இதுதவிர புதிய பல்சர் பைக்கில் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் பிரீலோடு அட்ஜஸ்ட் வசதி கொண்ட மோனோஷாக் யூனிட் வழங்கப்படலாம். பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 மில்லிமீட்டர், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படலாம். இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. 

Tags:    

Similar News