இது புதுசு

இந்திய வெளியீட்டுக்கு ரெடியாகும் கியா 7 சீட்டர் கார்கள்

Published On 2024-04-15 14:13 GMT   |   Update On 2024-04-15 14:13 GMT
  • அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
  • வாகனங்களை உருவாக்க இருப்பதாக தெரிவித்தது.

கியா நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், அந்நிறுவன எதிர்கால திட்டங்களை அறிவித்தது. அப்போது இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாகவும், இந்தியாவுக்கு ஏற்ற வாகனங்களை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்தது.

அந்த வகையில், கியா நிறுவனம் 2024-25 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் எம்.பி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வரிசையில் கியா EV9 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ள கியா EV9 இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

 


கியா EV9 மாடல் தவிர புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த கார் ஏழு மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்.

இரு மாடல்களுடன் கியா எலெக்ட்ரிக் RV மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த கார் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த கார் கரென்ஸ் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும்.

Tags:    

Similar News