இது புதுசு

அட்றா சக்க.. இந்தியாவில் அறிமுகமான Lamborghini புது மாடல் கார்.. என்ன ஸ்பெஷல்?

Published On 2025-05-02 12:34 IST   |   Update On 2025-05-02 12:34:00 IST
  • வெறும் 2.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.
  • மொத்த பிரேக் ஹார்ஸ்பவர் 907 bhp ஆகும்.

லம்போர்கினி இந்தியா நிறுவனம், நாட்டில் புதிய உயர் செயல்திறன் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் பெயர் லம்போர்கினி டெமராரியோ. இந்த காரின் ஷோரூம் விலை ரூ.6 கோடியில் இருந்து தொடங்குகிறது.

லம்போர்கினி டெமராரியோ மூன்று மின்சார மோட்டார்களுடன் இணைந்து செயல்படும் 4.0 லிட்டர் இரட்டை-டர்போ V8 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மொத்த பிரேக் ஹார்ஸ்பவர் 907 bhp ஆகும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 343 கி.மீ என்று நிறுவனம் கூறுகிறது.

இது மட்டுமல்லாமல், இந்த கார் வெறும் 2.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த ஹைப்ரிட் சிஸ்டம் 3.8 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இதை 7 kW AC சார்ஜரைப் பயன்படுத்தி 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கைப் பயன்படுத்தி பயணத்தின்போதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.

இது முன்புறத்தில் 20 அங்குல டயர்களையும் பின்புறத்தில் 21 அங்குல டயர்களையும் பெறுகிறது.

காரில் 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 8.4 அங்குல செங்குத்து இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் 9.1 அங்குல கோ-டிரைவர் டிஸ்ப்ளேவும் உள்ளன. இந்த காரில் சிட்டி, ஸ்ட்ராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா போன்ற 13 டிரைவிங் மோடுகளும் உள்ளன. 

Tags:    

Similar News