ஆட்டோமொபைல்

ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஜாஜ் டாமினர்

Published On 2017-09-29 10:27 GMT   |   Update On 2017-09-29 10:27 GMT
இந்திய இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ சர்வதேச சந்தை வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வகையில் தனது டாமினர் மாடலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

இந்திய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ சர்வதேச சந்தையிலும் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வகையில் பஜாஜ் டாமினர் பைக்கினை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஜாஜ் டாமினர் 400 மாடல் ஸ்போர்ட்ஸ் க்ரூசர் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாகவும், நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வோரை குறிவைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் 10,000 முதல் 12,000 டாமினர் 400 யுனிட்களை விற்பனை செய்ய பஜாஜ் திட்டமிட்டது. தற்சமயம் மாதம் 1500 யுனிட்கள் மட்டுமே விற்பனையாகி வருகிறது. எனினும் பண்டிகை காலத்தில் மாதம் 2,000 யுனிட்கள் விற்பனையாகும் என பஜாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பஜாஜ் டாமினர் 400 தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் டாமினர் விற்பனை மந்தமாக இருப்பதைத் தொடர்ந்து ஏற்றுமதி மூலம் விற்பனையை அதிகரிக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373சிசி ஃபியூயல் இன்ஜெக்டெட் லிக்விட் கூல்டு KTM இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34.5bhp மற்றும் 35NM டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News