ஆட்டோமொபைல்
போக்குவரத்து விதிமீறல்

மனைவி மற்றும் பேரக் குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றவருக்கு ரூ. 66,000 அபராதம்

Published On 2019-09-24 10:51 GMT   |   Update On 2019-09-24 10:51 GMT
ஸ்கூட்டரில் ட்ரிபில்ஸ் சென்ற இந்தியருக்கு ரூ. 66,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது.



ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் பேல்ஸ் பகுதியில் தனது மனைவி மற்றும் பேரக் குழந்தையுடன் ஸ்கூட்டரில் ட்ரிபில்ஸ் சென்ற இந்தியருக்கு ரூ. 66,000-க்கும் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ட்ரிபில்ஸ் செல்வது குற்றம் என்ற போதும், அவ்வப்போது இருசக்கர வாகனங்களில் ட்ரிபில்ஸ் செல்வது இந்தியர்களின் வாடிக்கையாக இருக்கிறது. நகரங்களில் இந்த எண்ணிக்கை குறைவு தான் என்றாலும், கிராமப்புறங்களில் ட்ரிபில்ஸ் செல்வது சகஜமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

அந்த நினைப்பில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றவர் ஸ்கூட்டரில் மனைவி மற்றும் பேரனை ஏற்றிக் கொண்டு பயணித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தால் அபராதம் விதிக்கப்படுவதை அறியாததால் இந்திய மதிப்பில் ரூ. 66,040 அபராதமாக செலுத்தியுள்ளார்.



விதிமீறி வாகனம் ஓட்டியதை கண்டறிந்த போலீசார், இந்தியரை நிறுத்தி அவர் மது அருந்தியிருக்கிறாரா என சோதனை செய்தனர். பின் ஸ்கூட்டரில் ட்ரிபில்ஸ் சென்றதற்கு அபராதம் விதித்தனர்.

ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதற்கு 344 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16,510), எட்டு வயதுக்கும் குறைவான நபரை ஏற்றி சென்றதற்கு 344 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16,510) மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றதற்கு 344 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16,510), ஹெல்மெட் அணியாமல் பயணரை ஏற்றி சென்றமைக்கு 344 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16,510) என மொத்தம் ரூ. 66,040 என அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News