மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-02-12 03:56 GMT   |   Update On 2024-02-12 03:56 GMT

12.2.2024 முதல் 18.2.2024 வரை

ஆரவாரமான வாரம். உச்சம் பெற்ற தனாதிபதி செவ்வாயின் பார்வை தனம், குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் தாராளமான தன வரவு உண்டாகும். ஆடம்பரச் செலவில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஆடம்பர விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் மீது பதிந்த வீண் சங்கடங்கள் அவமானம், பழிச் சொற்களை நீங்கும். அரசு வேலை முயற்சி பலிதமாகும். தொழிலில் திருப்தியான வளர்ச்சியும் வருமானமும் வந்து சேரும். தொழிலில் கைவிட்டுப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் வந்து மகிழ்ச்சியை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அரைகுறையாக நின்ற பணிகள் துரிதமாக நடைபெறும். 6ம் அதிபதி சூரியன் 12-ல் மறைவதால் ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.

சிலருக்கு புதிய நான்கு சக்ர வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து வாங்குவது அல்லது விற்பனையால் லாபம் உண்டு.பூர்வீகச் சொத்து தொடர்பாக சித்தப்பாவுடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்ற நேரம். ஒரு சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். சில இளவயதினர் காதல் வயப்படுவார்கள். கணவன், மனைவியிடையே நிலவிய பனிப் போர் மறையும். கடந்த கால மனக்கசப்புகள் குறையும். தினமும் கனகதார ஸ்தோத்திரம் கேட்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News