என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை
21.12.2025 முதல் 27.12.2025 வரை
மீனம்
மகிழ்ச்சியான நிம்மதியான வாரம். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சூரியன், செவ்வாய், சுக்ரனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. அனைத்து விதமான செயல்களிலும் அனுகூலமான பலன் உண்டாகும்.
இளைய சகோதர, சகோதரி மூலம் நிலவிய குழப் பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குலத் தொழில் உள்ளவர்களுக்கு தொழில் வளர்ச்சி பல மடங்காகும். பணவரத்து திருப்தி தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அதே வேளையில் சுபச்செலவுகளும் அதிகமாகும்.
மறு திருமணத்தால் ஏற்பட்ட மனச் சங்கடம் நீங்கும். நோய் தொல்லை குறையும். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்வில் நாட்டம் அதிகரிக்கும். பெண்கள் புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனிமையாகப் பொழுதை கழிப்பார்கள். மகான்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை
14.12.2025 முதல் 20.12.2025 வரை
மீனம்
பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும் வாரம். ஜென்ம சனியால் பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சமூக அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். புத்திக் கூர்மை அதிகரிக்கும்.
எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக்கும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும்.
14.12.2025 அன்று இரவு 9.41 மணி முதல் 17.12.2025 அன்று காலை 10.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிகமான அலைச்சல், உறவுகள் மீது அதிருப்தி, பழகிய வட்டாரத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சியை தவிர்க்கவும். எதிலும் ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தினமும் நவகிரக காயத்ரி மந்திரம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை
7.12.2025 முதல் 13.12.2025 வரை
மீனம்
சாதகமான வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் ஜென்மச் சனியால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எதிரி, போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள்.
உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் குறையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். வீடு மாற்றும் எண்ணம் நிறைவேறும்.
குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். உயர் கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி தரும். விவசாயிகளுக்கு மழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு பணியாளர்களால் அசவுகரியம் உண்டாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்து உரிய முறையில் வந்து சேரும்.ஸ்ரீ ராமர் வழிபாட்டால் சுப செய்திகள் தேடி வரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை
30.11.2025 முதல் 6.12.2025 வரை
மீனம்
தடை தாமதங்கள் அகலும் வாரம். ஜென்ம ராசியில் நின்ற சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற உறவுகள் வந்து இணைவார்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும்.
வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும். சிலருக்கு அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும்.
தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஓய்வு, நிம்மதியான தூக்கம், சந்தோஷம் என இந்த வாரத்தை மகிழ்ச்சியாக கடப்பீர்கள். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை
23.11.2025 முதல் 29.11.2025 வரை
மீனம்
தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும் வாரம். ராசிக்கு உச்ச குருவின் வக்கிர பார்வை உள்ளது. ராசி அதிபதி குரு தனது ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் காலமும், நேரமும் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் ஜென்மச் சனியால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. வீடு, மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும்.
விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும் என்ற தாரக மந்திரத்தை மனதில் குறிக்கோளாக வைத்து செயல்படுவீர்கள். சில நன்மைகளும், மாற்றங்களும் நடக்கும். தகப்பனார் வழியில் ஆதரவும், அனுகூலமும் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் கூட அறிவும், ஆலோசனை வழங்கிய நிலைமாறும்.
வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவது புத்திசாலித்தனம். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகளும் துயரங்களும் விலகும். ஆண் வாரிசு உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கை துணை மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. தினமும் குரு கவசம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
மீனம்
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குருபகவான் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியும் கூடும். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களையும் அடைவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும். திருமணம், குழந்தை பேறு, பேரன், பேத்தி, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும்.
தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தாய்வழிச் சொத்து தேடி வரும். தேவையற்ற கற்பனை, பயங்கள் அகலும். மன சஞ்சலமின்றி நிம்மதியாக தூங்குவீர்கள். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அடகு வைத்த நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள்.
17.11.2025 அன்று மதியம் 3.35 முதல் 20.11.2025 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாது போன்ற மன வருத்தம், சங்கடங்கள் நீடிக்கும். வேலையில் மந்தத்தன்மை நிலவும். சிவபுராணம் படித்து சிவ, சக்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை
9.11.2025 முதல் 15.11.2025 வரை
மீனம்
மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும் வாரம். ராசிக்கு அதிசார குருவின் ஒன்பதாம் பார்வை உள்ளது. ஆளுமை திறன் கூடும். வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். உத்தியோகஸ்தர்கள் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம்.
3,8-ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அழகு, ஆடம்பர பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாகும். தொலைந்து போன, திருடுபோன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். இளைய சகோதரருக்கு திருமணம் நடக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 2.11.2025 முதல் 8.11.2025 வரை
2.11.2025 முதல் 8.11.2025 வரை
மீனம்
எதிர்பாராத பணவரவு உண்டாகும் வாரம். 3, 8-ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்டத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பும் நேரம். பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. அதே போல் விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலக பணிச் சுமை அதிகரிக்கும்.
இடமாற்றம், வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்றவை ஏற்படலாம். ராசிக்கு குருப்பார்வை இருப்பதால் வெற்றி நிச்சயம். மனத் தடுமாற்றம் இருக்காது. குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் சென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம். தியானம், யோகா போன்ற ஆழ்மன எண்ணங்களை சீராக்கும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள். பிரதோஷ வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
மீனம்
விடா முயற்சிகள் வெற்றி தரும் வாரம். ராசியில் உள்ள சனிக்கு குரு மற்றும் சுக்ரனின் பார்வை உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகமாகும். இதுவரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். வெளிவட்டார செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும்.
தொழிலை இழுத்து மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா? என்று நம்பிக்கை இழந்து இருந்தவர்கள் கூட வாழ்வில் செட்டிலாக்கி விடும் வகையில் மாற்றமான நல்ல சுப பலன்கள் உண்டாகும். வீடு, நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் விற்பனையின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும். வாரிசுகளுக்கு விரும்பிய அரசு வேலை கிடைக்கும். சிறைதண்டனை அனுபவிப்பவர்களுக்கு நன் நடத்தை காரணமாக விடுதலை கிடைக்கும். ஆன்மீகப் பெரியவர்கள் நட்பு கிடைக்கும். கந்த சஷ்டி அன்று மஞ்சள் அபிஷேகம் செய்து முருகனை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிப்பலன் 19.10.2025 முதல் 25.10.2025 வரை
கடன் தொல்லைகள் குறையும் வாரம். ராசியில் உள்ள சனிக்கு குருவின் ஐந்தாம் பார்வை உள்ளது. இது தர்மகர்மாதிபதி யோகம். அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் கடன் தொல்லையை கட்டுப்படுத்த கூடிய அளவிற்கு நல்ல சந்தர்ப்பங்களில் கூடிவரும். வரா கடன்கள் வசூலாகும். அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். காலம் தாழ்த்தாமல் நிச்சயித்த திருமணத்தை உடனே நடத்த வேண்டும். ஜென்ம சனியை மீறிய சில நல்ல பலன்கள் நடக்கும். இதுவரை நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும்.
படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து நடமாடுவார்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் வெற்றி சுலபமாகும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். 21.10.2025 அன்று காலை 9.36 முதல் 23.10.2025 இரவு 10.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் தூக்கமின்மை இருக்கும். ஐப்பசி மாசம் நீர் நிலைகளில் நீராடுவதால் ஆன்ம பலம் பெருகும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 12.10.2025 முதல் 18.10.2025 வரை
கவலைகள் குறையும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் ராசியில் உள்ள சனிபகவானை பார்க்கப் போகிறார். மீன ராசிக்கு பலவிதமான கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் பணக்கஷ்டம் ஏற்படாது. கடன் பாதிப்பு இருக்காது. பழைய பாக்கிகள் வசூலாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் அதிக லாபத்தை தரப்போகிறது. ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் நிம்மதி தரும். பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.
பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணிசமான பாலிசி முதிர்வு, தொகை, பிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் முதிர்வு தொகை, ஏலச்சீட்டு பணம் கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகளைப் பெறுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உக்கிர தெய்வங்களை வழிபடுவதால் உயர்வுகள் கூடும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை
5.10.2025 முதல் 11.10.2025 வரை
வெற்றி மேல் வெற்றி தேடிவரும் அற்புதமான வாரம். அடுத்த 48 நாட்களுக்கு ராசி அதிபதி குரு உச்சம் பெற்று ராசியில் உள்ள சனிபகவானை பார்க்க போகிறார். இது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். இதனால் இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும்.
எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலைமறையும். தடை தாமதங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிட்டும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும்.
குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சீராகும். ஸ்ரீ வல்லப கணபதியை வழிபட வளமான வாழ்க்கை உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






