என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை
7.9.2025 முதல் 13.9.2025 வரை
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் பார்வையால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும். அறுவை சிகிச்சை வரை சென்ற கை, கால், மூட்டு வலி பிரச்சினைகள் தாமாக சீராகும். இது நாள் வரை உங்களை ஆட்டிப்படைத்த இனம் புரியாத மன சஞ்சலம் விலகும்.
ஆன்மீக பயணம், வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் ஆர்வம் கூடும். நிலம், வீடு, வாகனங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். தாய் வழியில் திரண்ட சொத்துக்கள் நகைகள் பணம் கிடைக்கக்கூடிய அமைப்புகள் உள்ளது. பொருளாதார நிலை மேம்படும். ஜாதகர் மற்றும் தாயின் உடல்நிலையை சீராக பராமரிக்க வேண்டும்.
வம்பு, வழக்கை ஒத்தி வைக்கவும். யாருக்கும் ஜாமின் போடக்கூடாது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும். திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு செவ்வாயின் சம சப்தம பார்வை உள்ளது. இதில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உள்ளது. தொழில் உத்தியோக ரீதியான அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு நிரந்தர பணி கிடைக்கும். சம்பந்திகள் கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் பாதிகப்படலாம்.
சிலர் பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவர். சிலர் மனதிற்கு பிடிக்காத வேலையை நிராகரித்து புதிய பணிக்கு முயற்சி செய்யலாம். கடந்த காலத்தில் வாங்கிய நிலத்தை பத்திரப் பதிவு செய்வீர்கள்.சிலர் நீண்ட காலமாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் இறங்குவார்கள். சிலருக்கு புதிய வீடு கட்டும் ஆர்வம் உதயமாகும்.
உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடன் மறைந்த தாய், தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் மனக் கசப்பு உருவாகும். பிரதோஷ நாட்களில் சுத்தமான நல்லெண்ணெயில் நந்திக்கும் சிவனுக்கும் எண்ணெய் காப்பு செய்து வழிபட சுய ஜாதகரீதியான அனைத்து விதமான பாதிப்புகளும் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் வக்ர சனி பகவான் சஞ்சாரம். ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள் வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும்.
வாழ்க்கைத் துணையுடன் இருந்த பனிப் போர் மறையும். அரசியல்வாதிகள் மனவுமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும்.விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். 27.8.2025 அன்று இரவு 7.21 முதல் 30.8.2025 காலை 7.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் இடம் பொருள் ஏவல் பார்த்து நடத்த வேண்டும் யாரையும் பகைக்க கூடாது.காலத்தின் அருமை அறிந்து செயல்பட வேண்டும்.மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை
17.8.2025 முதல் 23.8.2025 வரை
தடைகள் விலகும் வாரம். அதிர்ஷ்டம் பற்றி கூறும் பஞ்சம ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சுக்கிரன் புதனுடன் இணைந்து நிற்பதால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். தடைகள் விலகி மன நிம்மதி கூடும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக செயல்படும். இதுவரை அரசுவழி ஆதாயம், உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும்.
ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். அதற்கு தகுந்த வரவும் இருக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முன்னோர்களின் பரம்பரை வியாதிகளின் பாதிப்பு இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை. கை, கால் முட்டி வலி வேதனைகள் குறையும். வைத்தியம் பலன் தரும். சகோதரர் வகையில் வரவு உண்டு. திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். கணவன்-மனைவி ஒற்றுமை கூடும். தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை
10.8.2025 முதல் 16.8.2025 வரை
துன்பங்களும், துயரங்களும் முடிவுக்கு வரும் வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு 2,9-ம் அதிபதி செவ்வாயின் பார்வை உள்ளது. திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். செய்த தர்மம் தலை காக்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம்.
தடைப்பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். நடுத்தர வர்க்கத்தின் வருமானம் உயரும்.வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.
தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை
3.8.2025 முதல் 9.8.2025 வரை
சுப விசேஷங்கள் கைகூடும் வாரம். ராசி அதிபதி குருபகவான் அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இது விபரீத ராஜயோக அமைப்பாகும். சிலருக்கு மனைவி மூலம் அதிர்ஷ்ட பணம், சொத்து கிடைக்கும் அல்லது வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு. வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறலாம்.
சிலர் வாகனத்தை மாற்றலாம். குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் பழைய கதை பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். திருமண தடை அகலும். குழந்தை பேறு உண்டாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலவிய ஏற்ற இறக்கங்கள் சமன்படும்.
ஆன்லைன் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் உயரும். சுய ஜாதக பரிசீலனை செய்த பிறகு புதிய தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு இரவும், பகலும் படித்த படிப்பு கை கொடுக்கும். உடல் அசதி, சளி இருமல் போன்ற சிறுசிறு அசவுகரியம் இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகமாகும். வரலட்சுமி விரத நாளில் கலச பூஜை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை
27.7.2025 முதல் 2.8.2025 வரை
வாழ்வாதாரம் உயரும் வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு செவ்வாயின் சம சப்தம பார்வை இருப்பதால் புகழ், அந்தஸ்து, சகல சவுபாக்கியங்கள், கவுரவத்துடன் வாழ்வீர்கள். பலர் தொழில் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். நாவில் குல தெய்வம் நின்று பேசும். வாக்கு பலிதம் உண்டாகும்.
பேங்கிங், ஆடிட்டிங், ஆசிரியர் பணி, குல தொழில், வட்டி வருமானம், வாடகை வருமானம், பிள்ளைகள் மூலம் வருமானம், பூர்வீகச் சொத்து மூலம் வருமானம், புரோகிதம், ஜோதிடம், வேதம் ஓதுதல் போன்றவற்றால் வாழ்வாதாரம் உயரும். அதிக உற்சாகமாக இருந்தாலும் உடன் பிறந்தவர்கள் தொடர்பான சில மன உளைச்சல் இருக்கும்.
கை கால் மூட்டு வலி பல் சார்ந்த பாதிப்புகள் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். 31.7.2025 அன்று பகல் 11.15 மணி முதல் 2.8.2025 அன்று பகல் 11.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் பிரச்சினையை பிள்ளைகள் முன் விவாதிப்பதை தவிர்க்கவும். நேர்மையாகவும் கடுமையாகவும் உழைத்தாலும் மேலதிகாரியால் தொந்தரவு கூடும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை
20.7.2025 முதல் 26.7.2025 வரை
அதிர்ஷ்டமான வாரம். அஷ்டம அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுகிறார். இது விபரீத ராஜயோக அமைப்பாகும். உடன் பிறந்தவர்களின் உதவியால் பொருளாதார நிலைகள் உயரும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம், பெற்று வெற்றி அடைவீர்கள். அதிர்ஷ்ட பணம், பொருள், வாரிசு இல்லா சொத்து போன்றவைகள் கிடைக்கலாம்.
சிலருக்குப் புதிய வாகன யோகம் உண்டாகும். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். இடைவிடாத தெய்வப் பிரார்த்தனையால், தாமதமான திருமணங்கள் நிச்சயிக்கப்படும். குழந்தைகளின் வளர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். புதிய வீடு போன்ற அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கு முன், அதற்குரிய மூலப் பத்திரங்கள், வில்லங்க விவகாரங்கள், பட்டா போன்ற ஆவணங்களை ஆராய்ந்து வாங்குவது நல்லது.
தகாத நட்புகளை தவிர்ப்பது நல்லது. பொறாமையால், கண்திருஷ்டியால் நண்பர்களே பகைவராவார்கள். ஆயுள், ஆரோக்கிய குறைபாடு சீராகும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு சந்தன அபிஷேகம் செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை
13.7.2025 முதல் 19.7.2025 வரை
கவனமாக செயல்பட வேண்டிய வாரம். ராசியில் செவ்வாயின் எட்டாம் பார்வையில் நிற்கும் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார். சில தடுமாற்றத்திற்கு பிறகு முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஜென்மச் சனியால் ஏற்பட்ட கடன் தொல்லை, சகோதர விரோதம், அரசு வகைச் சிக்கல்கள் அகலும்.
வெளிநாட்டு வேலைக்கான முயற்சி வெற்றி தரும். மாணவர்களுக்கு கல்வி முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலர் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். பெற்றோர் வழியில் சில உதவிகள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். வாழ்க்கைத் துணை நண்பர்களின் உதவியால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்துடன் இன்பச் சுற்றுலாப் பயணங்களால் இன்புறுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான முயற்சிகளை ஒத்தி வைக்கவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சிதரும். தாய் மாமனால் நன்மை ஏற்படும். தினமும் சிவ புராணம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
சுமாரான வாரம். ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் 13.7.2025 அன்று வக்ர கதியில் செல்கிறார். ஜென்ம சனியின் தாக்கம் வெகுவாக குறையும். அன்றாட பணியில் உள்ள சில சிக்கலான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலும் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி முயற்சிகளில் நன்மைகள் நடைபெறும். தீய நட்பால் தடம் மாறிப் போனவர்கள் நல்வழிப்படுவார்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளிடம் சில விஷயத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்வது உங்களுக்கு சிக்கலைத் தரலாம். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது நல்லது.
திருமண முயற்சியில் திருப்பம் உண்டாகும். நோய் தாக்கம் குறையும்.தாயின் அன்பும், அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். உயர்கல்விக்கு விரும்பிய கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கும். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும். எவர் தடுத்தாலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். பவுர்ணமி அன்று சத்யநாராயணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை
29.6.2025 முதல் 5.7.2025 வரை
கவனமாக இருக்க வேண்டிய காலமிது. ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் 8ம் பார்வை பதிவதால் தன்னம்பிக்கை குறையும். உடன்பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடு தோன்றும். அநாவசியமான விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
வியாபாரிகள் முன் பின் தெரியாதவர்களிடம் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்குவதை தவிர்க்க வேண்டும்.
வேலைப் பளுவால் நேரம் தவறிய உணவு, தூக்கமின்மை, உடல் அசவுகரியம் அல்லது உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். உடல்நலத்திலும் அக்கறை காட்டவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். புதிய தொழில் முதலீட்டை தவிர்க்கவும்.
தேவையற்ற மனக்கவலையால் மற்ற வேலைகளில் மனம் லயிக்காது. மனதை ஒரு நிலைப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத் தொல்லையில் இருந்து விடுபட முடியும். 4.7.2025 அன்று காைல 3.19 மணி முதல் 6.7.2025 அன்று மாலை 4.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தனிமையில் இருப்பதை விரும்புவீர்கள். எந்த புதிய முடிவும் எடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கவும். சித்தர்களை வழிபாடு செய்வது சிறப்பு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை
22.6.2025 முதல் 28.6.2025 வரை
சுமாரான வாரம். ராசிக்கு செவ்வாயின் எட்டாம் பார்வை இருப்பதால் பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். பற்றாக் குறை வருமானத்தில் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு பணம் எனும் தனம் சமூக அந்தஸ்து பெற்றுத் தரும். ராஜமரியாதை கிடைக்கும்.
உங்கள் முயற்சியால் வெற்றியும்,சாதனையும் படைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்ற மக்களால் பெருமை சேரும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம்.
புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் மறைமுக எதிர்ப்பு ஏற்படும்.நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அமாவாசையன்று கோவில் குளத்து மீன்களுக்கு பொரி போட வேண்டும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






