என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை
15.6.2025 முதல் 21.6.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு செவ்வாய் சனி சம்பந்தம். புதிய முயற்சிகள் மேற்கொள்ள சாதகமான வாரம். குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிப்பதால் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வாக்கு வன்மை லாபம் பெற்றுத் தரும். சகோதரர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளது.
வியாபாரிகள் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையை அதிகரிப்பீர்கள். வெளிநாட்டு வேலை முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும். பொருளாதார மந்த நிலை நீங்கும். கடன்களைக் குறைக்க புதிய முயற்சி எடுப்பீர்கள். தீய நட்பில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவுகளால் ஏற்பட்ட பாதிப்பு குறையும்.
அலுவலகத்தில் உங்கள் மேல் சுமத்தப்பட்ட பழிகள் விலகும். சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ நேரும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் பிரிந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். கொடுக்கல் வாங்கல், பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளின் கல்விக்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். தினமும் குரு கவசம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
08.06.2025 முதல் 14.06.2025 வரை
சகாயமான வாரம். ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் எட்டாம் பார்வை. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமும் துணிச்சலும் மேலோங்கும். உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். வழக்குகளின் வெற்றி செய்தி கிட்டும். நீண்ட நாள் மனக்குறைகள் விலகும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள்.
புத்திர பிராப்தம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சமுதாய மதிப்பு மரியாதை உயரும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளின் திருமண வாழ்வு மேலும் சிறப்படையும். செவித்திறன் குறைபாடு சீராகும். நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் வரலாம்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது. பணத் தேவைகள் பூர்த்தியாகும். 9.6.2025 அன்று காலை 8.50 வரை சந்திராஷ்டமம் உள்ளது. எளிதில் முடிய வேண்டிய முயற்சிகள் இழுபறியாகும். முன்யோசனை இல்லாத செயல்களால் கிடைக்க வேண்டிய நல்ல சந்தர்ப்பங்கள் தவறலாம். ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
01.06.2025 முதல் 07.06.2025 வரை
தன்னம்பிக்கை கூடும் வாரம். ராசியில் சனி பகவான். தன ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலவரங்கள் மிக சாதகமாக உள்ளதால். வாழ்க்கை முறையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை கூடும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.
தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சியை அதிகரிக்க கூடிய சுயசிந்தனை அதிகரிக்கும். கடன் விஷயத்தில் நிறைய மாற்றம் ஏற்படும். சிலருக்கு கேட்ட கடன் கிடைக்கும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். வயோதிகர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு சீராகும். தந்தை அல்லது தந்தை வழி உறவில் மனக்கசப்பு ஏற்படலாம்.
சிலர் விருப்ப திருமணம் செய்யலாம். பெண்கள் வீட்டிற்கு தேவையான சில முக்கிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு வளமான எதிர்காலம் உருவாகப் போகிறது. பிள்ளைகளால் பெருமை சேரும். சொத்துச் சேர்க்கை உண்டாகும். 6.6.2025 அன்று இரவு 8.06 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சந்திராஷ்டம நாட்களில் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். ஸ்ரீ சந்தான லட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை
25.05.2025 முதல் 31.05.2025 வரை
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசியில் சனிபகவான் சஞ்சாரம். எனினும் தைரிய ஸ்தான அதிபதி சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய வேகமான செயல்பாடுகளுக்கு துணையாக இருப்பார். உத்தியோகஸ்தர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நிச்சயம். பணிபுரியும் இடத்தில் பணத்தை கையாளுவதில் கவனம் தேவை. இளைய சகோதரரின் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதிக்க நேரும். சனியின் 10ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் புதிய தொழில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பெண்களுக்கு சரளமான பண புழக்கம் இருக்கும்.
அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகள் விசாரணை தள்ளிப்போகும். சிலருக்கு விபரீத ராஜ யோகமான அதிர்ஷ்ட பொருள் பணம் கிடைக்கக்கூடிய நேரம் உள்ளது. சிலரின் மூத்த சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு அகலும். அமாவாசையன்று வஸ்திர தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
18.05.2025 முதல் 24.05.2025 வரை
ஏற்ற இறக்கமான வாரம். ராசியை விட்டு ராகுவில் விலகி விட்டார் என்றாலும் இது ஜென்ம சனியின் காலமாகும். முயற்சியில் தடை தாமதம், உடன் பிறந்த இளைய சகோதர, சகோதரிகளிடம் கருத்து வேறுபாடு மிகுதியாக இருக்கும். வெளிநாடு சென்ற சிலர் வேலை பிடிக்காமல் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார்கள். வீடு, வாகன பிராப்த்தம் உள்ளது. திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும்.
குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பூமி, மனைகள் வாங்குவதில் நிலவிய தடைகள் அகலும். மறு திருமண முயற்சி சாதகமாகும். உள்ளம் மகிழும் சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும் . குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி உறவு பலப்படும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்கக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை கூடி வரும்.
சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். காதல் பிரச்சினையால் வம்பு, வழக்கு வரலாம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. தினமும் விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை
11.5.2025 முதல் 17.5.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம். ராசியை விட்டு ராகு பகவான் வெளியேறப் போகிறார். ஜென்மச் சனியின் காலம் என்றாலும் சுக ஸ்தானம் செல்லும் குரு பகவான் உங்களை காப்பாற்றுவார். தன வரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலர் நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள்.
பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் கூட்டாளிகள் அல்லது வாழ்க்கை துணையால் வம்பு வழக்கு உருவாகலாம். மேலும் இந்த காலகட்டத்தில் யாருக்கும் ஜாமீன் போடக் கூடாது. எந்த செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை குறைக்க வேண்டும்.
இது போல் ஒவ்வொரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
13.5.2025 அன்று அதிகாலை 2.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. சித்ரா பவுர்ணமி அன்று குல தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை
4.5.2025 முதல் 10.5.2025 வரை
எதிர்பார்ப்புகளை குறைக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி குருவுடன் அஷ்டமாதிபதி சுக்ரன் பரிவர்த்தனை பெற்றதால் சில காரியத்தடைகள் எதிர்கொள்ள நேரும். ஜென்மச் சனியின் தாக்கத்தால் சற்று குழம்பினாலும் சமாளித்து விடுவீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ சொத்து, பங்குபத்திரம் வாங்குவீர்கள். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம் அல்லது விரயச் செலவு அதிகமாகும்.
சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வெளிநாட்டில் செட்டிலாகும் வாய்ப்பு ஏற்படும். இடது கண்ணில் சிறு உபாதைகள் தோன்றி மறையும் அல்லது அறுவை சிகிச்சை செய்ய நேரும். பொன், பொருள் பற்று குறையும். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூட எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள். 10.5.2025 பகல் 1.42 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் திருமணத்திற்கு வரன் பற்றி தெளிவாக விசாரித்த பிறகு முடிவு கூறுவது நல்லது. பண விஷயத்தில் சற்று நெருக்கடி இருக்கும் அல்லது விரயச் செலவு அதிகமாகும். நவகிரக குரு பகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை
27.4.2025 முதல் 03.5.2025 வரை
எண்ணம் போல் வாழ்க்கை அமையப் போகும் வாரம். இன்னும் சில நாட்களில் ராசியை விட்டு ராகு பகவான் விலகப் போகிறார். ராசியில் ராகு நின்றதால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டாகும்.
இழந்த இன்பங்களை மீட்டுப் பெறப் போகிறீர்கள். தொட்டது துலங்கும். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை, ஒத்துழைப்பு ஏற்படும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.
கடன் பெறுவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தடைபட்ட கட்டுமானப் பணிகள் துரிதமடையும். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிலர் ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைக்கலாம். திருமண முயற்சிகள் காலதாமதமாகலாம். தினமும் குரு கவசம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை
20.4.2025 முதல் 26.4.2025 வரை
ஆன்மீக வழிபாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டிய வாரம். ராசியில் 4 கிரக சேர்க்கை உள்ளதால் சில நல்லதும், சில கெட்டதும் சேர்ந்தே நடக்கும். அதிக அலைச்சலுக்கு பிறகு தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சம்பந்திகள் கருத்து வேறுபாட்டை தவிர்ப்பது நல்லது.
நண்பர்களிடம், கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன்கள் அமையும். ஒரு சிலர் வேலை மாற்றம் செய்வார்கள் அல்லது வேலையிலிருந்து தொழிலுக்கு மாறுவார்கள்.
தொழில் உத்தியோகத்தில் வேலைப் பளு மிகுதியாக இருக்கும். ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு, பாஸ் புக், ஆர்.சி. புக் போன்ற ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். உணவு கட்டுப்பாடு தேவை. மன அமைதியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்க தியானம், மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.காரிய சித்திக்கு அஷ்டபுஜ துர்க்கையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை
13.4.2025 முதல் 19.4.2025 வரை
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசியில் நான்கு கிரகச் சேர்க்கை உள்ளதால் உடன் பிறந்தவர்களின் திருமணத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஜென்மச் சனியின் தாக்கம் உள்ளதால் தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோ சித்து செயல்படவும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் உண்மையாக உற்சாகமாக, உழைக்க வேண்டும். தொழில், வேலைக்காக இடம் பெயர நேரும். விரும்பிய அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
சில பெண்களை அச்சுறுத்திய மாத விடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி உண்டு. 15.4.2025 அன்று இரவு 8.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் எதையும் தகர்க்க முடியும். காளியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை
06.4.2025 முதல் 12.4.2025 வரை
உடலையும், மனதையும் கட்டுப்படுத்த வேண்டிய வாரம்.ஜென்மச் சனியின் தாக்கத்தாலும் ராசியில் உள்ள ஐந்து கிரகச் சேர்க்கையாலும் மனக் குழப்பம் மன சஞ்சலம் உருவாகும். யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் மூலம் உடலையும், மனதையும் கட்டுப்படுத்துவது அவசியம். புதிய தொழில் முயற்சியை தவிர்க்கவும். வெளிநாட்டு வேலை முயற்சி நிறைவேறும். தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. நீதி மன்ற வழக்குகள் முடிவாகாமல் இழுத்துக் கொண்டே இருக்கும்.
பொருளாதார விஷயத்தில் நிதானமும் கவனமும் அவசியமானதாகும். நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு ஆறுதலாக இருக்கும். கணவன்-மனைவி கருத்தொற்றுமை சிறப்படையும். தன லாபம் ஏற்படும். சேமிப்பு உயரும். அதிகமான அலைச்சல்", பெற்றோர் மீது அதிருப்தி, பழகிய வட்டாரத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. மன உளைச்சலை தவிர்க்க அமைதியை கடைபிடிக்கவும். நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக் கெல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை நவகிரகங்களின் வழிபாடு வழங்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை
30.3.2025 முதல் 5.4.2025 வரை
தடை தாமதங்கள் அகலும் வாரம்.ராசி அதிபதி குருவிற்கு சனியின் மூன்றாம் பார்வை. சாதகமான சூழ்நிலைகள் அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். உத்தியோகத்தில் நல்ல பெயர் உண்டாகும். எண்ணத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் விலகும்.மிகப் பெரிய பொருளாதார மாற்றம் உண்டாகும். கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பண வரவால் குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.
தேங்கி கிடந்த பணிகள் விரைவில் முடிவுக்கு வரும். யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் உங்கள் சொந்த முயற்சியில் வீடு, வாசல், வாகனம் அமையும். நட்பு வட்டாரங்க ளிடம் மரியாதை உயரும். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். திருமண வாய்ப்புகள் கூடி வரும். மாணவர்களின் திறமைகள் வெளிப்படும். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வீர பத்திரரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






