என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
30.3.2025 முதல் 05.4.2025 வரை
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குருவிற்கு சனியின் மூன்றாம் பார்வை. சாதகமான சூழ்நிலைகள் அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். உத்தியோகத்தில் நல்ல பெயர் உண்டாகும். எண்ணத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் விலகும். மிகப்பெரிய பொருளாதார மாற்றம் உண்டாகும். கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பண வரவால் குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.
தேங்கி கிடந்த பணிகள் விரைவில் முடிவுக்கு வரும். யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் உங்கள் சொந்த முயற்சியில் வீடு, வாசல், வாகனம் அமையும். நட்பு வட்டாரங்க ளிடம் மரியாதை உயரும். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். திருமண வாய்ப்புகள் கூடி வரும். மாணவர்களின் திறமைகள் வெளிப்படும். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வீர பத்திரரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம்.ஜென்ம ராசியில் 6 கிரகச் சேர்க்கை. ஜென்மச் சனியின் தாக்கம் துவங்குகிறது.சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளைச் சந்திக்க நேரும்.
ஜென்மச் சனியின் காலம் என்பதால் கண் திருஷ்டி, போட்டி-பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். கடன் பிரச்சிினைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டை பெறுவீர்கள். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் மன சஞ்சலத்தில் இருந்து விடுபட அமாவாசையன்று சித்தர்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
சுமாரான வாரம். ராசியில் 4 கிரகச் சேர்க்கை உள்ளது. ஜென்மச் சனி துவங்கப் போகிறது.ஜென்மச் சனியால் மனம் அலைபாயும். விரயங்களும் ஏற்படும். எனவே கவனத்துடன் செயல்பட்டு வெற்றியைக் காணுங்கள். ஆறாம் அதிபதி சூரியன் ராசியில் இருப்பதால் சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிக்கவும் ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் நுணுக்கமாக நடந்து கொள்ளுங்கள். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். 6,8ம்மிட அதிபதிகள் வலுப்பதால் சிலருக்கு கடன் தொல்லை சர்ஜரி, வம்பு, வழக்கு வரலாம்.
சுய தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையாக நிதானத்துடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றினாலும் உணர்ச்சி வசப்படாமல் மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்ளவும்.17.3.2025 அன்று நள்ளிரவு 1.15 மணி முதல் 19.3.2025 அன்று பகல் 2.06 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. ராசியில் சூரியன் நிற்பதால் உங்களிடம் வேகம் அதிகரித்து உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டுவீர்கள். பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். அஷ்டமாதிபதி சுக்ரன் ராசியில் உச்சம் பெறுவதால் சிலருக்கு கடல் கடந்த வேலை செய்யும் யோகம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். தாய், தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். சிலர் பிறர் பிரச்சினைகளை தங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்பட்டு கெட்ட பெயரை உண்டாக்குவார்கள். சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும்.
அரசியல் நாட்டம் மிகும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். காதல் விவகாரங்களால் அவமானம் அதிகரிக்கும். வார இறுதியில் ராசியில் நான்கு கிரகங்கள் சேருகிறது. இது கிரகண தோஷ அமைப்பு.அறிமுகம் இல்லாத நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க கூடாது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. மாசி மகத்தன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
புதிய திருப்பங்கள் உண்டாகும் வாரம் .ராசியை நோக்கி சனி பகவான் வருகிறார். சில மாதங்களில் ராசியை விட்டு ராகு வெளியேறுகிறார். சிலர் வாழ்வாதரத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் எண்ணம் மேலோங்கும்.
கவுரவம் பெருமைக்காக கடன் வாங்கி சிலர் வீண் செலவு செய்வார்கள். சிலர் வியாபார முதலீட்டிற்கு கடன் கேட்க முனைவார்கள். சிலர் ஏதாவதொரு வகையில் ரொட்டேசன் செய்து தொழிலை பெருக்குவார்கள். பங்கு வர்த்தகத்தில் நிதானிக்க முடியாத ஏற்ற இறக்கம் நிலவும்.
அரசு அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுடன் விரும்பத்தகாத இடமாற்றமும் உண்டாகும். சகோதரர்களுடன் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தலாம். மாசி, பங்குனி மாதம் முடியும் வரை வழக்குகள் மற்றும் அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்தல் நலம்.
திருமணம் போன்ற சுப காரியங்களில் இருந்த தடைகள் அகலும். வயது முதிர்ந்தவர்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக இடம்பெயர நேரும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பதும் நேர்மறை எண்ணங்களை அதிகரிப்பதும் நல்லது. ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
அனுகூலமான வாரம். ராசியில் புதன் சுக்ரன் ராகு சேர்க்கையால் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. விரைவில் ஜென்ம சனி துவங்க உள்ளதால் வாழ்க்கை தத்துவத்தை படிக்கப் போகிறீர்கள்.
மாமனாருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுவது அவசியம். சிலருக்கு மன பயம் உண்டாகும். தெளிவான முடிவு எடுக்கும் தன்மை குறையும். சிலர் மனக் குழப்பத்தால் ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வார்கள். கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம்.
தேவையில்லாமல் வாக்கு கொடுப்பது, சத்தியம் செய்வதை தவிர்க்கவும். தாயின் ஆரோக்கிய குறைபாடு அகலும். சிலரின் சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும். கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க முடியும்.
தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். திருமணம் மற்றும் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவராத்திரியன்று பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
ஆடம்பர பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும் வாரம் . ராசியில் உச்ச சுக்ரன் ராகு சேர்க்கை. தொழிலில் கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகள் குறைந்து படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
உழைப்பிற்கான அதிர்ஷ்டத்தை அடையக் கூடிய அற்புதமான வாரம். அழகு ஆடம்பர பொருட்களின் மோகம் வீடு, வாகன யோகம் கை கூடி வரும். ராசியில் ராகு, 7-ல் கேது மேலும் ஜென்மச் சனி துவங்க இருப்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப, தோஷத்தால் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். கணவன், மனைவி ஒற்றுமையாக இருந்தாலும் மூன்றாம் நபரின் குறுக்கீடு நிம்மதி குறைவை ஏற்படுத்தும் என்பதால் பிறரின் நயவஞ்சக பேச்சை நம்பக்கூடாது.
வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். 17.2.2025 அன்று மாலை 6.02 மணி முதல் 20.2.25 அன்று காலை 6.49 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும். தாய் வழியில் மனக்கவலை கருத்து வேறுபாடு உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை
9.2.2025 முதல் 15.2.2025 வரை
தெளிவான சிந்தனைகள் பிறக்கும் வாரம். ராசி அதிபதி குரு உச்சம் பெற்ற அஷ்டமாதிபதி சுக்ரனுடன் பரிவர்த்தனை. வெகு விரைவில் ஜென்மச் சனி துவங்க உள்ளது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை இந்த ஜென்மச் சனியின் காலத்தில் உணரப் போகிறீர்கள். வாழ்வில் முக்கியமான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் வெற்றியை உறுதி செய்வீர்கள்.
பணத்தேவைகள் நிறைவேறும். வங்கி கடனை திரும்பச் செலுத்த கால அவகாசம் கிடைக்கும். மாணவர்கள் அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம். பெரிய மனிதர்களின் ஆதரவில் கவுரவப் பதவி கிடைக்கும். சமுதாய அங்கீகாரம் உயரும். தொழில் மற்றும் உத்தியோகத்தின் மூலம் சிலருக்கு நல்ல வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைக்கும். சித்தப்பா மற்றும் மூத்த சகோதரருடன் பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும். பார்த்துச் சென்ற வரனிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தைப்பூசத்தன்று முருனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
புத்தியைத் தீட்ட வேண்டிய நேரம்.ராசி அதிபதி குருவுடன் 3, 8-ம் அதிபதி சுக்ரன் பரிவர்த்தனை பெறுகிறார். தெளிவான முடிவு எடுக்கும் தன்மை குறையும். ஞாபக மறதி உண்டாகும். வேலைப் பளு கூடும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். யாருக்கும் பணம் பொருள் இவற்றிற்கு ஜாமீன் போடக்கூடாது. விரைவில் ஜென்மச் சனி துவங்க உள்ளதால் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.தொழில் மற்றும் குடும்ப ரகசியங்களை வெளி நபர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.
பங்குச் சந்தை முதலீட்டில் மிகவும் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளை ஒத்தி வைக்கவும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சியில் தவறான விலை நிர்ணயம் உண்டாகலாம்.மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும்.பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும்.தினமும் சிவபுராணம் படிக்க மனக் கவலைகள் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை
26.1.2025 முதல் 1.2.2025 வரை
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குருபகவான் அஷ்டமாதிபதி சுக்ரனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். லட்சியங்களும், எண்ணங்களும் நிறைவேறும். மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். தடைகள், தாமதங்கள், மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். வாழ்க்தைத் துணை வழியில் வருமானமும் திரண்ட சொத்தும் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. ராசியை நோக்கி சனி பகவான் நெருங்கி வருவதால் தொழில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.
வேலையில் உள்ளவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படும். மன உளைச்சல், வேலைப்பளு மிகுதியாக இருக்கும். சிலர் பார்க்கும் வேலையில் நிலவும் அசவுகரியத்தால் புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். கணிசமான பணம் கைகளில் புரளும். வைத்தியச் செலவுகள் அதிகரிக்கும். முன்னோர் சொத்துப் பிரச்சினை நீதிமன்ற படி ஏற வைக்கும் என்பதால் பங்காளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். சிலருக்கு கூட்டுக் குடும்பம் அல்லது கூட்டுத் தொழிலில் பிரிவினை நடக்கும். தை அமாவாசையன்று அந்தணர்களின் தேவையறிந்து உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை
19.1.2025 முதல் 25.1.2025 வரை
தன்னம்பிக்கையான வாரம். ராசிக்கு 4-ல் வக்ர செவ்வாய் சுக ஸ்தான அதிபதி புதன் பார்வையில் சஞ்சாரம் செய்கிறார். தடையாக கிடந்த பணிகள் விறுவிறுப்படையும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடைகள் தாமதங்கள் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். அடமான நகைகள் மீண்டு வரும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தீராத கடனைத் தீர்க்கும் வழி தென்படும். எதிரி தொல்லைகள் குறையும். தொட்ட காரியங்கள் துலங்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இருந்த சங்கடங்கள் குறையத் துவங்கும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.
கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் உண்டாகும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து எதிர்பார்த்த பதில் வரும். சிலர் நீதிமன்ற வழக்கிற்கு அதிக பணம் செலவு செய்ய நேரும். 21.1.2025 அன்று காலை 10.03 மணி முதல் 23.1.2025 இரவு 10.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பணவரவில் தடை, தாமதம் ஏற்படுவதால் மன சஞ்சலம் உண்டாகும். எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு குதூகலத்தை அதிகமாக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
12.01.2025 முதல் 18.01.2025 வரை
கெட்டவன், கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். மீன ராசிக்கு 3,8-ம் அதிபதியான சுக்ரன் மற்றொரு மறைவு ஸ்தானமான 12-ம்மிடத்தில் விரயாதிபதி சனியுடன் சேர்க்கை பெறுகிறார். கடந்த கால நெருக்கடிகள் குறையத் துவங்கும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மறைமுக ஆதாயம் உண்டாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். மனைவி, பிள்ளைகளுக்கு தங்க நகைகள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.
திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். வீடு கட்ட வாகனம் வாங்க உகந்த நேரம். உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் நேரம். பெண்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். விரோதமாக இருந்தவர்கள் கூட அன்பாக பேசுவார்கள். பண்டிகை கால விடுமுறையை திட்டமிடுவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நோய்த் தாக்கம் குறையும். சிலர் தவறான நட்பு வலையில் மாட்டலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வது வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






