13.5.2024 முதல் 19.5.2024 வரை
லாபகரமான வாரம். தன ஸ்தானத்தில் புதன், சுக்ரன் சேர்க்கை லாப ஸ்தானத்திற்கு குரு பார்வை என தன லாப ஸ்தானம் பலம் பெறுவதால் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். தொழில் போட்டி, பொறாமை, மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். தொழில் நிமித்தமான வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் ஆதாயம் கிட்டும். பதவியில் நிலவிய குளறுபடிகள் நீங்கும். வேலை மாற்றத்திற்கான விருப்பம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள், நிர்வாகிகள், ஜோதிடர்கள், ஊடகத்தில் பணிபுரிபவர்களுள் சாதகமான பலன் நடக்கும் .
மனதில் அமைதி குடிபுகும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.விவாகரத்து வரை சென்ற குடும்ப வழக்கு சீராகும். தங்க ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புதிய ஆயுள் காப்பீடு, மெடிக்லைம் பாலிசிகள் எடுக்க உகந்த நேரம். அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் அழைப்பு வரும். வீட்டில் தங்கம் தங்கும். குருபகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406