மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-01-29 04:09 GMT   |   Update On 2024-01-29 04:10 GMT

29.1.2024 முதல் 4.2.2024 வரை

அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டிய வாரம்.ராசி அதிபதி குரு 2,9-ம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை மற்றும் அஷ்டமாதிபதி சுக்ரனுடன் சேர்க்கை. வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். பயணங்க ளின்போது புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முடியும்.கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்தி சாதூர்யத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள்.

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். இடமாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. 1.2.2024 பகல் 2.32 மணி முதல் 4.2.2024 அன்று 1. 04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனத் தடுமாற்றம், மனக்குழப்பம் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். பிரியமானவர்கள் வழியில் மனஸ்தாபம் வரும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News