மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-01-22 03:54 GMT   |   Update On 2024-01-22 03:54 GMT

22.1.2024 முதல் 28.1.2024 வரை

தேவைக்கு பணவசதி கிடைக்கும் வாரம். 2,9ம்- அதிபதி செவ்வாய் குருவுடன் பரிவர்த்தனை பெறுவதால் மகிழ்ச்சியும், சந்தோஷம் தொடரும். மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடந்து குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அறிவாற்றலால் சாதுர்யமாக செயல்படுவீர்கள். இதனால் குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு மிகுதியாகும். குடும்பத்தில் விருந்துகள், விழாக்கள், விசேஷங்கள் என மனமகிழும் சம்பவங்கள் நடக்கும்.

பொருளாதாரத்தில் நிலவிய மந்த நிலை மாறும். வீடு, வாகன யோகம் உண்டாகும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் புதிய வீடு வாங்குதல், கட்டுதல், பராமரித்தல் என சுப பலன்கள் கூடும். தேக சுகம் கூடும். பழைய கடன்களை அடைக்கலாம். ராசியில் ராகு 7-ல் கேது நிற்பதால் முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க கூடாது.அரசால் ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு கரு உருவாகும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.திருமணம் கூடி வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தைப்பூசத்தன்று இயன்ற தான தர்மம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News