மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-01-15 02:22 GMT   |   Update On 2024-01-15 02:23 GMT

15.1.2024 முதல் 21.1.2024 வரை

எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் வாரம். உப ஜெய ஸ்தான அதிபதி சூரியன் மற்றொரு உப ஜெய ஸ்தானமான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம். 2,9-ம் அதிபதி செவ்வாயின் பார்வை ராசிக்கு என கிரக நிலவரம் மீனத்திற்கு சாதகமாக இருப்பதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும். பொங்கல் பண்டிகைக்கு ஆன்மீகச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது. இதுவரை நிலையான வேலை இல்லாதவர்களுக்கு கவுரவமான உத்தியோகம் கிடைக்கும். தொழில் உத்தியோகத்தில் நிலவிய மந்த நிலை மாறும். தொழில் போட்டிகளை எதிரிகளை சமாளிக்கும் தைரியம் உண்டாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் நிலவிய சட்டச் சிக்கல் விலகும்.விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். சித்தர்களை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News