மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-01-08 04:21 GMT   |   Update On 2024-01-08 04:22 GMT

8.1.2024 முதல் 14.1.2024 வரை

தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு செவ்வாய் பார்வை. தடைபட்ட சொத்து விற்பனை தற்போது சாதகமாகி முழுத் தொகையும் கைக்கு வந்து சேரும். அரசு வேலைக்கு முயற்சி செய்ய ஏற்ற காலம். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். வேலை செய்யும் இடத்தில் சில அசவுகரியங்கள் அதிகரித்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைப்பீர்கள். தொழில் பங்குதாரரின் மேல் நம்பிக்கை குறைவு உண்டாகும் அல்லது கருத்து வேறுபாடு உண்டாகும்.

ஆரோக்கிய குறைபாடு சீராகும். தாய், தந்தை உங்களை புரிந்து கொண்டு உதவுவார்கள். காதல் விவகாரங்கள் அவமானத்தை தரும்.வாழ்க்கை துணை தொழில் உத்தியோக நிமித்தமாக இடம் பெயரலாம். பொங்கல் விடுமுறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். புதிய முயற்சிகளில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். பிரதோஷத்தன்று நரசிம்மரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News