மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-01-02 03:56 GMT   |   Update On 2024-01-02 03:57 GMT

1.1.2024 முதல் 7.1.2024 வரை

மனக்குறைகள் அகலும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாயின் 4-ம் பார்வை ராசியில் பதிகிறது. பேச்சாற்றலால் லாபம் சம்பாதிப்பீர்கள். அரசு வேலை வாங்க முயற்சிப்பீர்கள். வெளிநாடு செல்ல தடையாக இருந்த விசாப் பிரச்சினைகள் முடியும். தீட்டிய திட்டங்களில் வெற்றிபெற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவுவார்கள். உத்தியோகம் சம்பந்தமான பிரச்சினைகள் ஓரளவு நல்ல முடிவிற்கு வரும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் வந்து நிற்கும். குலதெய்வமே குழந்தையாக பிறக்கும். திருமண முயற்சி இழுபறியாகும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். அலைச்சல் மிகுதியாக இருந்தாலும் நிம்மதியான தூக்கம் இருக்கும்.

5.1.2024 காலை 6.47 முதல் 7.1.2024 மாலை 4.03 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நலம். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பழகக்கூடாது. முன்கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படவும். பிரதோஷ காலத்தில் உணவு தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News