மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-12-25 04:23 GMT   |   Update On 2023-12-25 04:24 GMT

25.12.2023 முதல் 31.12.2023 வரை

யோகமான வாரம். தன குருவால் பொன்னும், பொருளும் சேரும். சுப பலன்கள் அதிகமாகும் பல மடங்கு மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் ஏற்படும். இழந்த அனைத்தையும் திரும்பப் பெறப் போகிறீர்கள். நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். தொட்டது எல்லாம் பணமாக காய்க்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பணத்திற்காக உங்களை உதாசீனம் செய்த உறவுகள் தவறை உணர்ந்து மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். வாக்கு நிறைவேற்றுதல் உண்டாகும். கொடுத்த வாக்கை, நாணயத்தை காப்பாற்றுவீர்கள்.

உத்தியோகம், தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள். குறிப்பாக பேசுவதை தொழிலாக கொண்டவர்கள், உணவுத் தொழில், வக்கீல்கள், ஜோதிடர்கள், மார்கெட்டிங், அரசாங்க ஒப்பந்ததாரர்கள் போன்றோரின் தொழில்களின் வளர்ச்சியை அளவிட முடியாது. வராக்கடன் வசூலாகும்.வெளியே சொல்ல முடியாமல் தவித்த கடன் பிரச்சினையில் இருந்து மீள்வீர்கள். ஜாமீன் வழக்கு சாதகமாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். கண் கோளாறுகள் சீராகும். சரபேஸ்வரரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News