மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-12-18 03:51 GMT   |   Update On 2023-12-18 03:52 GMT

18.12.2023 முதல் 24.12.2023 வரை

விபரீத ராஜயோக அடிப்படையில் சில நல்ல பலன்கள் நடக்கும் வாரம். 6-ம் அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் 4,7-ம் அதிபதி புதனுடன் சஞ்சரிப்பதால் கூட்டுத் தொழிலில் திருப்பம் உண்டாகும்.சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். உலவுகின்ற கிரக நிலை வியாபாரத்திற்கு ஓரளவு உதவிகரமாக இருக்கும். புதிய தொழிலுக்காக விண்ணப்பித்த லைசென்ஸ் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 8-ம் அதிபதி சுக்ரன் குரு பார்வையில் ஆட்சி பலம் பெறுவதால் கணவரின் ஆரோக்கிய கேட்டால் வருந்திய பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட பொருள் வரவு ஏற்படும். உங்களை அவமானப்ப டுத்திய வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிடம் வலிமையாக இயங்கினால் வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழல் உருவாகும்.தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து. தடைபட்ட பாகப் பிரிவினை சொத்து, பணம் வரும். லவுகீக வாழ்வில் நாட்டம் மிகும். ஏகாதசியன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News