மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-12-11 05:17 GMT   |   Update On 2023-12-11 05:18 GMT

11.12.2023 முதல் 17.12.2023 வரை

விபரீத ராஜ யோகம் ஏற்படும் வாரம். அஷ்டமாதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்ட சொத்து, உழைக்காத வருமானம் உண்டு. தொட்டது துலங்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் அதி கரிக்கும். கலைத்திறன் வளரும். கலைத்துறை யினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். அஷ்டமாதிபதி வலுப்பதால் சிலருக்கு கடன் தொல்லை சர்ஜரி, வம்பு, வழக்கு வரலாம். சுய தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையாக நிதானத்துடன் இருக்க வேண்டும். புதிய தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலை யில் எதிர்பார்த்த வேலை மாற்றம் இடப்பெயர்ச்சி கிடைத்துவிடும்.

கணவன் மனைவிக்கிடையே நிலவிய இறுக்கமான மனநிலை நீங்கும். மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள். 2, 9-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று 6ம் அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் பிறவிக் கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம். அமா வாசையன்று முன்னோர்களுக்கு உரிய வழிபாடு செய்வதன் மூலம் பாக்கிய பலம் அதிகரிக்கும்.வாக்கு வன்மை உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News