மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-12-06 03:44 GMT   |   Update On 2023-12-06 03:45 GMT

4.12.2023 முதல் 10.12.2023 வரை

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் 6-ம் அதிபதி சூரியனுடன் சனி பார்வையில் சேர்க்கை பெறுகிறார். அஷ்டமாதிபதி சுக்ரன் ஆட்சி செய்கிறார். மறைவு ஸ்தான அதிபதிகள் வலுப்பெறுவதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எனினும் தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும். சிலருக்கு சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வாங்கும் எண்ணம் தோன்றும். தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது.பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தால் மதிப்பு, மரியாதை உயரும். 8.12.2023 இரவு 9.53 மணிக்குச் சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சினை யாக உருவாகும். தினமும் திருகோளாற்று பதிகம் படிக்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News