மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-11-27 05:00 GMT   |   Update On 2023-11-27 05:00 GMT

26.11.2023 முதல் 3.12.2023 வரை

விரும்பிய மாற்றம் தேடி வரும் வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாய் 6ம் அதிபதி சூரியனுடன் 9-ல் ஆட்சி பலம் பெறுவதால் அனைத்து விதமான செயல்களிலும் அனுகூலமான பலன் உண்டாகும்.எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பல மடங்காகும். வெளிநாட்டு வேலை, அரசு வேலை முயற்சியில் வெற்றி உண்டாகும். பணவரவு திருப்தி தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அதே வேளையில் சுபச்செலவுகளும் அதிகமாகும்.குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வாக்கு வன்மையால், பண பலத்தால் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக்கும்.

இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம்.அரசின் உதவித் தொகை கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும். உயர் கல்வி முயற்சி கைகூடும். குழந்தைகளின் மந்த தன்மை நீங்கும். பெண்கள் புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனிமையாகப் பொழுதை கழிப்பீர்கள்.தினமும் சிவ கவசம் படிக்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News