மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-11-20 04:49 GMT   |   Update On 2023-11-20 04:50 GMT

20.11.2023 முதல் 26.11.2023 வரை

முன்னேற்றமான வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் 11, 12-ம் அதிபதி சனியின் பார்வையில் ஆட்சி பலம் பெறுவதால் பாக்கிய பலம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.இறையருள் பரிபூரணமாக கிட்டும்.குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் விலகும். அலுவலகமே வியக்கும் வகையில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும். வாரிசுகளின் இடமாற்றம் நிம்மதி தரும். ராசியில் ராகு இருப்பதால் விரக்தி மிகுதியாகும்.

குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும்.தடைபட்ட பாகப் பிரிவினை சொத்து ,பணம் வரும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்குள் சந்தோஷம் இருக்கும்.ஏழரைச் சனியின் தாக்கம் இருப்பதால் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிப்பது முக்கியம். பவுர்ணமியன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News