கடகம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-12-25 04:16 GMT   |   Update On 2023-12-25 04:17 GMT

25.12.2023 முதல் 31.12.2023 வரை

திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 4,11-ம் அதிபதி சுக்ரன் வக்ர மடைந்த 3,12-ம் அதிபதி புதனுடன் சேர்க்கை.வெளியூர், வெளிநாட்டு வெளி மாநில வேலை முயற்சி வெற்றி தரும். 9-ம்மிட ராகுவால் தடைகள் விலகி திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் மூலம் அதிர்ஷ்ட லட்சுமி உங்கள் வீட்டிற்கு வருவாள். வேற்று மதநம்பிக்கை அதிகரிக்கும். ஜாமீன் போடக் கூடாது. அஷ்டமச் சனியின் காலம் என்ப தால் சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற பாலிசி எடுக்கலாம். பெரிய முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். தவறான வாக்கு பிரயோகம் செய்யக் கூடாது.

கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்யவும். முன் கோபத்தை குறைக்கவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம்.பொருளாதார பற்றாக்குறை அக லும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். இருக்கும் வேலை, நடத்திக் கொண்டு இருக்கும் தொழிலை மாற்றக் கூடாது. பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கை ஒத்தி வைக்கவும். புவனேஸ்வரியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News