என் மலர்
கடகம் - வார பலன்கள்
கடகம்
வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை
21.12.2025 முதல் 27.12.2025 வரை
கடகம்
காரிய அனுகூலம் உண்டாகும் வாரம். ராசிக்கு செவ்வாயின் 8ம் பார்வை உள்ளது. தாய் வழி, வீடு, வண்டி, நிலங்கள், கட்டிட வாடகை, கால்நடை சார்ந்த வருமானம் கிடைக்க பெறலாம். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும்.
லாட்டரி, பந்தயம், சூதாட்டம், புத்தி சார்ந்த, கற்ற கலை சார்ந்த வருமானம் உண்டு. சிலருக்கு பிள்ளைகள் மூலம் உபரி வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும். கவுரவப் பதவிகள், அரசாங்கப் பதவிகள் கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். இல்லத்தரசிகளுக்கு பொன் ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும்.
புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 24.12.2025 அன்று இரவு 7.46 முதல் 27.12.2025 அன்று அதிகாலை 3.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. குல, இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை கவசமாக காத்தருளும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை
14.12.2025 முதல் 20.12.2025 வரை
கடகம்
அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம். தன ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை உள்ளது. தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை கூடும். அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும். எடுக்கப்பட்ட முயற்சியால் எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும். தடைபட்ட பணிகள் விரைந்து செயல் வடிவம் பெறும். கடன், நோய் எதிரி தொல்லை நிவர்த்தியாகும்.
கொடுக்கல் வாங்கலில் பெரிய தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம். உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பணவரத்து வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பண பிரச்சினை நீங்கும்.
வானொலி தொலைக்காட்சி, ஊடக துறையினர் நல்ல மாறுதலும் மேன்மையும் பெறுவர். பெண்கள் குடும்பப் பணிகளை நேர்த்தியாக செய்து முடிப்பார்கள். திருமணம் முயற்சி செயல் வடிவம் பெறும். பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்ச்சியைத் தரும். பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை
7.12.2025 முதல் 13.12.2025 வரை
கடகம்
விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசியில் வக்கிரம் பெற்று நிற்கும் உச்ச குரு பகவான் வக்ரகதியில் 12-ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். சற்று நிதானமாக செயல்படுவதால் பெரிய நன்மைகளை அடைய முடியும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்க்கவும்.
தேவையற்ற வெளியூர் பயணங்களையும் வெளி உணவுகளையும் தவிர்த்தல் நலம். பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இனி இல்லை என்ற நிலை இல்லை. பெற்றோருடன் ஏற்பட்ட மனத் தாங்கல் மாறும். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் எதிரிகளை பிரமிக்க வைக்கும்.
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய்க்கு சனி மற்றும் குரு பார்வை இருப்பதால் மெக்கானிக். இயந்திரப் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெரிய தொழில் முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகளைத் தவிர்த்தல் நலம். வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களிடம் நல்லாசி பெற அஷ்டம ராகுவின் தாக்கம் குறைந்து திருமண தடை அகலும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை
30.11.2025 முதல் 6.12.2025 வரை
கடகம்
நன்மைகள் நடக்கும் வாரம். ராசியில் குரு பகவானும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரனும் பாக்கியஸ்தானத்தில் சனிபகவானும் சஞ்சரிப்பதால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. இது கடக ராசிக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நின்றாலும் ராகுக்கு வீடு கொடுத்த சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.
மனதில் நிலவிய கவலைகள் கஷ்டங்கள் விலகும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். அனைத்து செயல்களிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய வீடு கட்டுதல் கட்டிய வீட்டை விரிவு செய்தல் போன்றது தொடர்பான சிந்தனைகள் இருக்கும்.
கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்களும் கைகூடும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை
23.11.2025 முதல் 29.11.2025 வரை
கடகம்
புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. அனுகூலமற்ற காரியங்களைக் கூட சுமூகமாக முடித்துக் காட்டுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். மன உளைச்சலைத் தந்த பணியிலிருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள்.
கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும். வீடு, வாகன வசதிகள் மேம்படும். அரசு ஊழியர்கள் தடைபட்ட பதவி உயர்விற்கு முயற்சிக்கலாம். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். மாமன், மைத்துனன் வழி மனக்கசப்புகள் மாறும். சுபமங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வீண் விரயங்கள் மட்டுப்படும். வைத்தியச் செலவு குறையும்.
பிள்ளைகளின் எதிர் காலம் குறித்த திட்டங்கள் வெற்றியில் முடியும். 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி முதல் 29.11.2025 அன்று இரவு 8.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பச் சுமை கூடும். வரவை விட செலவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். சிவ வழிபாடு செய்வதால் நிம்மதி கூடும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
கடகம்
கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும் வாரம். ராசியில் உள்ள வக்ர குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயையும் பாக்கியாதிபதி சனிபகவானையும் பார்க்கிறார். பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகள் சர்ச்சைகள் அகலும். பல வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த பூர்வீகச் சொத்துக்கள் விற்கும்.
அரசியல்வாதிகளிடமும், அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி, வேலை விசயமாக இடம் பெயர நேரும். திருமணத்திற்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். கலைஞர்களுக்கு வேலைப்பளு மிகுதியாகும். மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். முதியவர்களுக்கு அரசின் உதவித்தொகை, பென்சன் கிடைக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல ஆதாயம் கிடைக்கும். அம்மன் வழிபாட்டால் மேன்மை அடைய முடியும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை
9.11.2025 முதல் 15.11.2025 வரை
கடகம்
முன்னேற்றமான வாரம். ராசியில் அதிசார குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். நல்ல முன்னேற்றம் ஏற்படும். எல்லோரும் பாராட்டக் கூடிய நல்ல புண்ணிய காரியம் செய்வீர்கள். தொழில் மூலம் நல்ல பலன்கள் தேடிவரும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் இணைவார்கள். கடக ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். திருமணம் கூடி வரும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் போகிறது. அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம்.
அடமானத்தில் இருந்த நகைகள், சொத்துக்கள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ராகு/கேதுக்களின் சஞ்சாரத்தால் சிறு மன சஞ்சலம் இருக்கும். திருமண முயற்சி வெற்றி தரும். சொந்த வீடு, வாகன கனவு நிறைவேறும். ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதகமாகும். ஆரோக்கியம் சீராகும். தீர்த்த யாத்திரை சென்று வருவதன் மூலம் ஆன்ம பலம் பெருகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 2.11.2025 முதல் 8.11.2025 வரை
2.11.2025 முதல் 8.11.2025 வரை
கடகம்
அமோகமான மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசிக்கு 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. உயர் கல்வியில் இருந்த தடை தாமதங்கள் விலகும். உபரி வருமானம் கிடைப்பதால் தாராளமாக செலவு செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். பங்குச் சந்தை ஆதாயமும் சேமிப்பும் அதிகரிக்கும். தாய், தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். வேலையில் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். குலதெய்வத்திடம் ஒரு முக்கிய கோரிக்கை வைப்பீர்கள். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் வாரிசு உருவாகும். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. பொதுக் காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் கூடும். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும். பவுர்ணமி அன்று குல தெய்வ வழிபாடு நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
கடகம்
வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசியில் குரு உச்சம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி என உலவுகின்ற கிரக நிலை ஓரளவு உதவிகரமாக உள்ளது. நிறைந்த அறிவு, திறமை இருந்தும் சாதிக்க முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும்.
தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். கூட்டுத் தொழிலில் திருப்பம் உண்டாகும். சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். பெற்றோர் வழியில் சில உதவிகள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும்.
31.10.2025 காலை 6.48 மணி முதல் 2.11.2025 அன்று பகல் 11.27 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பிடிவாதத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். கந்த சஷ்டியன்று வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிப்பலன் 19.10.2025 முதல் 25.10.2025 வரை
சுப பலன்களால் மனம் மகிழும் வாரம். ராசியில் உள்ள அதிசார உச்ச குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சிரமமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முக்கிய குடும்பத் தேவைகள் செய்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் சஞ்சலங்கள் குறைய துவங்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். அடுத்த 48 நாட்களுக்குள் உங்களுக்கு திருமணம் நிச்சயமாகும். பூர்வீகம் சார்ந்த செல்களில் ஏற்பட்ட தடைகள் அகலும்.
பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும்.வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் சீராகும். ஞாபக மறதி பிரச்சினை குறையும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் ஆதாயம் உணடாகும். ஜென்ம குருவின் காலம் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆன்மீகப் பெரியோர்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 12.10.2025 முதல் 18.10.2025 வரை
கருமமே கண்ணாக செயல்பட வேண்டிய வாரம். ராசியில் குரு பகவான் வார இறுதி நாளில் இரவில் உச்சம் பெற போகிறார். ஜென்ம குரு என்று பயப்படத் தேவையில்லை. பிற கோட்சார கிரகங்களின் செயல்பாடுகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. சிறப்பான பலன்கள் தேடி வரும். பாக்கியாதிபதி குரு தன் வீட்டைத் தானே பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தான வலிமையால் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் சாதகமாக நடக்கும்.
புதிய தொழில் வாய்ப்புகளால் வருவாய் பெருகும். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் விருப்பம் ஏற்படும். தீபாவளி வியாபாரம் அமோகமாக நடக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு. அசையும், அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வைத்தியத்தில் நீங்கும். திருமணத் தடை அகலும். மறுமண முயற்சி வெற்றி தரும். ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட சகல சவுபாக்கியங்களும் பெருகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை
5.10.2025 முதல் 11.10.2025 வரை
விரும்பிய புதிய மாற்றங்கள் உருவாகும் வாரம். ஜென்ம குருவின் ஆதிக்கம் துவங்கப் போகிறது. குரு பகவான் அதிசாரமாக ராசிக்குள் நுழைந்து உச்சமடைய போகிறார். சுமார் 48 நாட்கள் புதிய மாற்றங்கள் உருவாகலாம். புதியதாக சுய தொழில் துவங்குவதை விட உத்தியோகமே சிறப்பு. முதலீட்டாளர்கள் புதிய தொழில் ஒப்பந்தத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.
தொழில் கூட்டாளிகளிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். புதிய தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் என புதுப்புது மாற்றங்கள் நிகழும். தடைபட்ட வீடு கட்டும் பணி தொடரும். கணவன்-மனைவி ஒற்றுமை, திருமணம், சுபகாரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்கள் நடக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் உடல் ஆரோக்கியமும் சிறக்கும்.
இந்த வாரம் தீபாவளிக்கு புதிய ஆடைகள் வாங்குவீர்கள். சிலருக்கு தாயார் மூலம் கணிசமான தொகை கிடைக்கும். 6.10.2025 அன்று காலை 12.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். திங்கட்கிழமை சிவ வழிபாடு செய்வதால் உயர்வான நிலையை அடைய முடியும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






