என் மலர்tooltip icon

    கடகம் - வார பலன்கள்

    கடகம்

    வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை

    7.9.2025 முதல் 13.9.2025 வரை

    புத்திசாலித்தனத்தால் சாதனை படைக்கும் வாரம். ராசியில் 4,11-ம் அதிபதி சுக்ரன். வெற்றிகரமான முன்னேற்றங்கள் ஏற்படும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக் தகுந்த சூழ்நிலை வந்து சேரும். பணவரத்து அதிகமாகி, சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

    ஆன்லைன் வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். புதிய வீடு கட்ட திட்டம் போடுவார்கள். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துகள் சேரும். சிலருக்கு சொத்துக்கள் மதிப்பு உயரும். விவசாயம், கால்நடை வளர்ப்பு , பண்ணையாளர்களின் வருமானம் அதிகமாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்.

    மாமனாரால் ஏற்பட்ட மனச்சங்கடம் மறையும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் வருமானம் உண்டாகும். 8.9.2025 அன்று மதியம் 2.29 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாதீர்கள். ராசிக்கு 8-ம் இடத்தில் 7.9.2025 அன்று சந்திர கிரகணம் நடப்பதால் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை

    31.8.2025 முதல் 6.9.2025 வரை

    அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும் வாரம். ராசியில் தனித்த சுக்கிரன் உள்ளார். அழகு ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கூடும். குடும்ப உறவுகள் வருகையால் சந்தோஷமும், செலவும் பெருகும். தாய், தந்தை மற்றும் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். சிலர் தொழில், உத்தியோ கத்திற்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.

    கூட்டாளிகள் மற்றும் உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். நண்பர்களால் திடீர் லாபங்கள் உண்டாகும். கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கைகூடும். வராக்கடன்கள் வசூலாகும்.தடைபட்ட காதல் திருமணம் சுபமாக நடந்தேறும். துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

    பிள்ளைகளுக்கு சுப நிகழ்வுகள் சுபசெலவுகள் நடக்கும் 6.9.2025 அன்று பகல் 11.21 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலருக்கு அதிக கண்திருஷ்டியால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும். பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் மன சஞ்சலம் அகலும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை

    செல்வாக்கு சொல்வாக்கு உயரும் வாரம். ராசி அதிபதி சந்திரன் ராசிக்கு 2,3.4-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். வருமானம் உயர்வதால் உங்கள் செல்வாக்கு சொல்வாக்கிற்கு மதிப்பு இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறைந்திருக்கும் கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும். அடமான நகைகளை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்டிருந்த தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும்.

    வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும். வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும் பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்தி ருப்பது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.

    கடகம்

    வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை

    17.8.2025 முதல் 23.8.2025 வரை

    உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று உள்ளார். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பீர்கள். தெய்வ நம்பிக்கை கூடும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்வீர்கள். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.

    சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம். சமூக சேவைக்காக அதிக அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும்.

    சிலர் வாடகைக்கு வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்குவார்கள். மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். திருமணத் தடை அகலும். கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்கும். நோய்கள் தீரும். வைத்தியச் செலவு குறையும். சரபேஸ்வரரை வழிபட தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை

    10.8.2025 முதல் 16.8.2025 வரை

    சிறிய முயற்சியில் பெரிய தடைகள் அகலும் வாரம். ராசியில் சூரியன் நிற்பதால் தலைமைப்பதவி தேடி வரும்.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை வராது. வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்களின் திறமைக்கு நல்ல மதிப்பும் கிடைக்கும். அரசு வருமானம் ஆதாயம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். பாக்கிய ஸ்தான சனி பகவான் புதிய தொழில் முதலீட்டிற்கு தூண்டினாலும் ராகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப தொழிலில் அகலக் கால் வைப்பது நல்லது. பேராசையின் காரணமாக தவறான செயலில் ஈடுபடாத வரை ராகு, கேதுக்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

    பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 12.8.2025 அன்று காலை 6.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகலாம். பிறருக்கு பரிதாபப்பட்டு ஜாமீன் போடக்கூடாது. உணவு கட்டுப்பாடு அவசியம். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு எள்ளுருண்டை படைத்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை

    3.8.2025 முதல் 9.8.2025 வரை

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசியில் சூரியன் புதன் சேர்க்கை. உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். இன்னல்கள் குறையும். தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள். திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.

    தற்போது குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் நிற்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படும். சுய ஜாதக ரீதியாக ராகு-கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். ஆனாலும் அஷ்டம ஸ்தானத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும்.

    சிலருக்கு திருமணத் தடை இருக்கும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள், ஆதாயம் கிடைக்கும்.வரலட்சுமி விரத நாளில் மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை

    27.7.2025 முதல் 2.8.2025 வரை

    விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ராசியில் தன ஸ்தானாதிபதி சூரியன் சகாய ஸ்தான அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். எதையும் சாதிக்கும் திறனும், நினைத்ததை செய்து முடிக்கும் முனைப்பும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும்.

    சிறு தொழில் வியாபாரிகளுக்கு தேவையான வங்கிக் கடன் கிடைத்துத் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புத்திர பாக்கியம் உண்டாகும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும்.

    திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும். இரக்க குணத்தால் தான தர்மங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஓரிரு வாரங்களில் விரயங்கள் குறையும். நாக சதுர்த்தி அன்று சர்ப்ப சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை

    20.7.2025 முதல் 26.7.2025 வரை

    சுபிட்சமான வாரம். ராசியில் தனாதிபதி சூரியன் சஞ்சரிக்க போகும் அற்புதமான வாரம். ஆன்ம பலம் பெருகி மன சஞ்சலம், பய உணர்வு அகலும். பிரிந்து சென்ற குடும்ப உறவுகள் திரும்ப வருவார்கள். குடும்பத்தில் தடைபட்ட அனைத்து சுப நிகழ்வுகளும் பூர்த்தியாகும். தொழிலில் ஏற்றம் அதிகரிக்கும்.

    ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் அகலும். வைத்திய செலவு குறையும். ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். வருமானம் உயரும். பெண்கள் புதிய நகைச் சீட்டு துவங்கலாம். வேலையாட்களால் ஏற்பட்ட தொந்தரவு நீங்கும். சிலர் வீட்டை பழுது நீக்கம் செய்யலாம். சிலர் கூட்டாளிகளுடன் இணைந்து புதிய தொழில் கிளைகள் ஆரம்பிக்கலாம்.

    சந்தான பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு குலதெய்வ அனுகூலத்தால் குழந்தை பிறக்கும். பிறமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்கும். இழந்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். ஆடி வெள்ளிக்கிழமை கூழ் தானம் செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை

    13.7.2025 முதல் 19.7.2025 வரை

    நல்ல சிந்தனைகள் மேலோங்கும் வாரம். ராசியில் சூரியன் புதன் சேர்க்கை புத ஆதித்ய யோகம். வார ஆரம்பத்தில் சாதகமான பல நல்ல விஷயங்கள் நிறைவேறும். புதிய மாற்றம் ஏற்படும். வராது என்று முடிவு செய்த பணம் கைக்கு வரும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பும் கவுரவம் உயரும்.

    வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள், சகோதர சகோதரிகளால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஞாபகசக்தி கூடும். காது, மூக்கு, தொண்டை சார்ந்த பிரச்சினைகள் சீராகும். கை மறதியாக வைத்த பொருள், காணாமல் போன ஆவணங்கள், திருட்டுப் போன நகைகள், பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

    புதிய சொத்துக்கள் வாகனங்கள் வாங்குவீர்கள். 13.7.2025 அன்று மாலை 6:53 மணி முதல் 15.7.2025 அன்று இரவு 11.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலுவலக ரகசியங்களை காப்பாற்ற வேண்டும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். தினமும் சண்முக கவசம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை

    6.7.2025 முதல் 12.7.2025 வரை

    வளமான பலன்களைப் பெறும் வாரம். ராசியில் முயற்சி ஸ்தான அதிபதி புதன் சஞ்சரிக்கிறார். திட்டமிட்ட காரியங்களில் படிப்படியான வெற்றிகளை அடைவீர்கள். தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி சீராகும். மாதச் சம்பள தாரர்களுக்கு தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட் தீரும். வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள்.

    தொழிலில் இருந்த தடைகள் மெதுவாக விலகி மறுபடியும் துளிர்க்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலவிய அவஸ்தைகள் குறையும். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சனி பகவான் வக்ரமடைய உள்ளதால் புதிய முதலீடுகளை ஒத்திப் போடவும்.

    கல்லூரி உயர் படிப்பிற்கான முயற்சிகள் அனு கூலமாகும். பெண்களுக்கு உயர் ரக ஆடை ஆபரண சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய எதிர்பாலின நட்பால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். பவுர்ணமி அன்று அம்பிகையை வழிபடுங்கள்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை

    29.6.2025 முதல் 5.7.2025 வரை

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் வாரம். ராசியில் முயற்சி ஸ்தான அதிபதி புதன். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் அதிகரிக்கும்.

    அரசு வகை ஆதாயம் உள்ளது. வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும், ஏற்றமும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை கிடைக்கும். பழைய சேமிப்புகள், இன்சூரன்ஸ் பாலிசிகள் முடிவடைந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும்.

    புதிய சொத்து வாங்குபவர்களுக்கு அரசு, காவலர்கள் குடியிருப்பு பகுதியில் வீடு, மனை அமையும். சிலருக்கு ராணுவம், போலீஸ் மற்றும் பொதுப் பணித்துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாமனார், சகோதரர் மூலம் தன வரவு உண்டாகும். எதிர்பாராத வரவுகளால் கையிருப்பு சேமிப்பு உயரும். காணாமல் போன ஆவணங்கள், கை மறதியாக திருடு போன பொருட்கள் கிடைக்கும்.அம்மன் கோவில் உலவாரப் பணியில் ஈடுபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை

    22.6.2025 முதல் 28.6.2025 வரை

    தொழில் வளம் சிறக்கும் வாரம். ராசியில் புதன் இருப்பதால் அரசாங்க, வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். தொழிலில் சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. தாராள தனவரவு வந்து கொண்டே இருக்கும்.

    கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் வாங்க, வீடு கட்டும் பணி தொடர தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். சிலருக்கு மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். மூட்டு வலி, வயிறு சார்ந்த உபாதைகள் தீரும். பூர்வீக சொத்து தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும்.

    தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த தாய் வழி சீதனம் தேடி வரும். திருமண முயற்சி நிறைவேறும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிறரின் வழக்குகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. அமாவாசை அன்று இயன்ற தானம், தர்மம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×