என் மலர்tooltip icon

    கடகம் - வார பலன்கள்

    கடகம்

    வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை

    15.6.2025 முதல் 21.6.2025 வரை

    சுப விரயம் உண்டாகும் வாரம். விரய ஸ்தானத்தில் குரு, புதன் சூரியன் சேர்க்கை இருப்பதால் மனதின் வேகத்தைப் போல் செயல் வேகமும் அதிகரிக்கும். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறும். மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கு ஆன்மீகம் தான் சிறந்தது என்பதை உணர்வீர்கள். பணம், அன்பு, குடும்பம் ஆகியவற்றிலிருந்து விலகி ஆன்மீக மார்க்கத்தில் இணைய மனம் லயிக்கும்.

    வீடு, மனை, வாகனம் மற்றும் பிள்ளைகளின் சுப விசேஷத்திற்கு கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நடக்கும். விட்டுக் கொடுத்து வாழ்வது தான் திருமண வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமைக்கு சில புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.

    16.6.2025 அன்று பகல் 1.10 முதல் 18.6.2025 அன்று பிற்பகல் 6.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மந்த தன்மையுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு கைகால், மூட்டுவலி போன்ற சிறு, சிறு உடல் உபாதைகளால் சோர்வு மிகுதியாகும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை

    08.06.2025 முதல் 14.06.2025 வரை

    நிம்மதியான வாரம். ராசியில் எந்த கிரகமும் இல்லை. ராசியை எந்த கிரகமும் பார்க்க வில்லை. மனம் லகுவாக இருக்கும். தீராத மனக் குழப்பங்கள் தீரும். பிறருக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவீர்கள். வாக்கு வன்மை லாபம் பெற்றுத் தரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவார்கள்.

    தொழில் வளம் சிறக்கும். நிம்மதியாக தொழிலை நடத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சிந்தித்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர் காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம்.பொருளாதார மந்த நிலை நீங்கும்.

    கடன்களைக் குறைக்க புதிய முயற்சி எடுப்பீர்கள். உங்கள் மனைவியின் சின்ன சின்ன எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். தாய், தந்தையால் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். கற்ற கல்வியால் பயன் உண்டு. சிலருக்கு சொத்து விற்பனையில் லாபம் உண்டாகும். உடல் நலம் சீராகி உற்சாகமாக செயல்படுவீர்கள். தினமும் சந்திர தரிசனம் செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை

    01.06.2025 முதல் 07.06.2025 வரை

    தடைகள் விலகும் வாரம். தன அதிபதி சூரியன் புதனுடன் சேர்வதால் பணத்தை எவ்வாறு சம்பாதித்து சேமிப்பது என்ற கலையை கற்றுக் கொள்வீர்கள். அதனால் வளர்ச்சியும், லாபமும் பெருகி சேமிப்பு உயரும். வைத்திய செலவு குறையும். இல்லத்தில் நிலவிய கூச்சல் குழப்பம் விலகி நன்மைகள் உண்டாகும்.

    வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் முன்னர் வேலை பார்த்து விலகிய வேலைக்கே மீண்டும் செல்வார்கள். வாழ்க்கை துணைவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இல்லறம் இனிக்கும். சிலர் குழந்தை பேற்றிற்கு மாற்று முறை மருத்துவத்தை நாடலாம். பூர்வீக சொத்து மீதான வழக்குகள் சமாதனமாக பேசி முடிக்கப்படும்.

    பெண்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேறும். பாகப்பிரி வினைகள் சுமூகமாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சாதகமாகவே இருக்கும். சிலர் பல் சீரமைப்பு செய்யலாம். உறவினர்களின் வருகை குடும்பத்தில் குதூகலத்தை அதிகரிக்கும். ஆன்மீக தலங்களுக்கு சென்று மன மகிழ்சியை அதிகரிப்பீர்கள். ஸ்ரீ தான்ய லட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை

    25.05.2025 முதல் 31.05.2025 வரை

    சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். ராசியில் நீச்ச செவ்வாய். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் திறமைக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். தந்தை வழி உறவுகளிடம் இருந்த சங்கடங்கள், பிரச்சினைகள் விலகி ஆதரவு உண்டாகும்.

    முக்கிய பணிகள் சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு வெற்றி தரும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகி முன்னேற்றத்திற்கான அறிகுறி தென்படும். புதிய தொழில் வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். அஷ்டமத்தில் ராகு உள்ளதால் அதிர்ஷ்டத்தில் ஆர்வத்தை குறைப்பது நல்லது.

    பிள்ளைகள் போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். கடன், நோய், எதிரி தொல்லைகள் அகலும். கணவன், மனைவி அன்பாக இல்லறம் நடத்துவார்கள். புதிய வீடு வாங்குதல், புதிய வீடு கட்டி குடிபுகுதல், வசிக்கும் வீட்டை விரிவு படுத்துதல் போன்ற பாக்கிய பலன்கள் இனிதே நடந்தேறும். அமாவாசையன்று பச்சரிசி தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை

    18.05.2025 முதல் 24.05.2025 வரை

    சுமாரான வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். விரைவில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கான நல்ல பலன் கிடைக்கப்போகிறது. அழகு, ஆடம்பர பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

    வாக்கினால் தொழில் புரியும் வழக்கறிஞர்கள் மற்றும் புரோக்கர்களுக்கு ஏற்றம் மிகுதியாக இருக்கும். அன்றாடம் அழியும் பொருட்களான காய்கறிகள், பழங்கள், திரவ பொருட்களான பால், தயிர், ஜூஸ் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் உயரும். குரு பகவான் ராகுவுடன் இணைந்து விரயத்தை மிகைப்படுத்துவார்.

    ஐந்தாயிரத்தில் போட்ட ஷாப்பிங் பட்ஜெட் ஐம்பாதாயிரத்தில் முடியும். ஐந்து பவுன் நகைக்கு ஆசைப்பட்டு போட்ட நகைச் சீட்டு முதிர்வுத் தொகை ஒரு பவுனாக கிடைக்கும். 20.5.2025 அன்று காலை 7.35 மணி முதல் 22.5.2025 பகல் 12.08 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். குல தெய்வ வழிபாடு அவசியம்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை

    11.5.2025 முதல் 17.5.2025 வரை

    ஆதாயமான வாரம். தனாதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். கற்ற கல்வி மூலம் ஆதாயம் வருமானம் உண்டு. பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில், உணவுத் தொழில் நடத்துபவர்கள் தனித் திறமையுடன் மிளிர்வார்கள். பொருளீட்டுவதிலும், தனம் சேர்ப்பதிலும் கவனம் கூடும். அலுவலகப் பணிகள் அதிகரிக்கும் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும்.

    வீட்டில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். சிலர் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவார்கள். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த தொகை ஓரிரு நாட்களில் கிடைக்கும். திருமணம், குழந்தை பேறில் நிலவிய சங்கடங்கள் சீராகும்.

    தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். ஆண் வாரிசுகளுக்கு விரும்பிய அரசு வேலை கிடைக்கும். கோவில் கட்டும் பாக்கியம், பொதுக் காரியங்களுக்கு உதவுவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். கோடை விடுமுறைக்கு இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். சித்ரா பவுர்ணமி அன்று உணவு தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

    4.5.2025 முதல் 10.5.2025 வரை

    சகாயமான வாரம். தனாதிபதி சூரியன் 3,12ம் அதிபதி புதனுடன் தொழில் ஸ்தானத்தில் சேர்க்கை. விரும்பிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. குடும்ப தோஷம் விலகும். பொன், பொருள், ஆடம்பரச் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். வரவு அதிகரித்து செலவு குறையும். கடன் தொல்லை குறையும். திட்டமிட்ட செயல்பாட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். மனதில் அமைதி குடிபுகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட பிணக்குகள் மறையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

    பெண்கள் கற்பனை கவலைகளைத் தவிர்த்து எதார்த்தமாக வாழப் பழக வேண்டும். தம்பதிகள் ஒருவர் மேல் மற்றவர் அன்பை பொழிவார்கள். கன்னியருக்கும், காளையருக்கும் உகந்த வரன் அமையும். மனைவி வழிச் சொத்து மற்றும் பூர்வீகச் சொத்தில் நிலவிய மன சஞ்சலம் அகலும். பிற இனத்தவர் மற்றும் மதத்தினரால் நன்மைகள் உண்டாகும். இளம் வயதினர் காதல் வயப்படுவார்கள். சுப விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குரு, சுக்ரன் பரிவர்த்தனை இருப்பதால் தங்க ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    சகாயமான வாரம். ராசியில் நீச்ச செவ்வாய். முன்னோர்களின் சொத்து தொடர்பான பாகப் பிரிவினைகள் நடக்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்து வழக்கில் திருப்பம் ஏற்படலாம். ஆன்மீக சுற்றுப் பயணம் மற்றும் மகான்களின் சந்திப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளின் திறமைகள் வெளி உலகத்திற்கு தெரியவரும். அரசாங்க மற்றும் வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி உண்டாகும்.

    பெண்கள் அமைதியாக குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவார்கள். செலவை விட வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் துறையினரின் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் துவங்கும் திட்டங்கள் நிறைவேறும். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும்.

    உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம், மன நிம்மதி தரும். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆன்மீக நாட்டம் கூடும். உங்கள் பகுதியில் கவுரவப் பதவிகள் கிடைக்கும். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    சாதகங்கள் நிறைந்த வாரம். ராசியில் பூர்வ புண்ணிய அதிபதி செவ்வாய். தனாதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் என கிரக நிலவரம் மிகச் சாதகமாக உள்ளது. பூர்வீகம் சம்பந்தப்பட்ட விசயங்களில் சாதகமான மாற்றம் உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக இடம் பெயர நேரலாம். சிலர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த தொழில் முயற்சியில் ஈடுபடலாம்.

    சில பெண்கள் தங்கள் பகுதி மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராவார்கள். மூத்த சகோதரரின் திருமண முயற்சி சுபமாகும். பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். கணவன், மனைவி வாக்கு வாதங்கள் சீராகும். தாயின் அன்பும், ஆசியும் உங்களை மகிழ்விக்கும்.

    கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். 23.4.2025 அன்று காலை 12.31 மணி முதல் 25.4.2025 அன்று காலை 3.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொருள் விரயம் அல்லது நேர விரயம் மிகுதியாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. மன நிம்மதியை அதிகரிக்கதில்லை காளியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை

    13.4.2025 முதல் 19.4.2025 வரை

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் அடைவதால். அதிர்ஷ்டம் கூடும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள்.

    பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை,கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகளின் தாக்கம் குறையும். பேச்சை மூலதனமாக கொண்ட விற்பனை பிரதிநிதிகள், வக்கீல்கள், ஆசிரியர்களுக்கு வருமானம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். பெண்களுக்கு மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். தேவையற்ற இன்னல்கள் குறையும். உடல் நிலை சீராக இருக்கும். மாரியம்மனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசியில் நீச்ச செவ்வாய்.புதிய திட்டங்கள், முயற்சிகள் செயல் வடிவம் பெறும்.நினைத்தது நிறைவேறி நிம்மதி பிறக்கும்.தேங்கி கிடந்த பணிகள் துரிதமாக நடைபெறும். பிள்ளைகளின் திருமணம், உயர் கல்வி, வேலைவாய்ப்பில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். பூர்வீகத்தில் புதிய வீடு கட்டிக் குடியேறும் யோகம் உண்டாகும். குல தெய்வ அருள் உள்ளது. சிலருக்கு கவுரவப் பதவி கிடைக்கும். வராக் கடன்கள் வசூலாகும். தந்தை வழிச் சொத்துக்க ளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    விபரீத ராஜ யோகமாக அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் தேடி வரும். பூமி, மனையின் மதிப்பு கூடும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வால் மனம் மகிழும்.சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில், நல்ல முன்னேற்றங்களைத் தரும்.அரசு வேலைக்கு முயற்சி செய்யும் எண்ணம் உண்டாகும். அண்டை அயலாருடன் இருந்த சண்டை சச்சரவுகள், பிணக்குகள் மறையும். இளம் பெண்களுக்கு கரு உருவாகும். விநாயகர் வழிபாட்டால் நல்லது நடக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை

    30.3.2025 முதல் 5.4.2025 வரை

    நிம்மதியான வாரம். அஷ்டமச் சனி உங்களுக்கு காட்டிய பயம் குறைவு தான். ஆனால் தகவல் தொடர்பு சாதனங்க ளில் ராசி பலன் கூறி படுத்திய பாடு சொல்லி மாளாது. இனி எதற்காகவும் கவலைப் படாமல் நிம்மதியாக இருக்கலாம். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வருமானம் கூடும். புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வீடு, வாகனம் யோகம் தொடர்பான பணிகள் நடக்கும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்கள் சென்று மனம் மகிழ்வீர்கள்.கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.

    சமூக பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். மனதை உறுத்தி வந்த கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். திங்கட்கிழமை சிவனுக்கு பாலாபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×