ஆன்மிக களஞ்சியம்

தைப்பூச சிறப்புகளும் விரத முறையும்

Published On 2023-10-22 11:07 GMT   |   Update On 2023-10-22 11:07 GMT
  • தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.
  • உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.

தைப்பூச சிறப்புகள்:

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே.

இக்காரணங்களுக்காகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்றுதான் சமாதியானார்.

இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூச விரத முறை:

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர்.

தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.

உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.

மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

Tags:    

Similar News