ஆன்மிக களஞ்சியம்

நோய் தீர்க்கும் கண்வமகரிஷி

Published On 2023-11-22 10:22 GMT   |   Update On 2023-11-22 10:22 GMT
  • ஒவ்வொரு சிவ தலத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார்.
  • சூரியனின் பிரதான சீடராக கருதப்படுபவர் யக்ஞவல்கியர்.

ஒவ்வொரு சிவ தலத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார்.

அவர்களது அருள் ஆற்றல் ஆலயத்துக்கு வரும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.

அந்த வகையில் ஞாயிறு திருத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்த புருஷராக கண்வ மகரிஷி திகழ்கிறார்.

இவர் சகுந்தலம் காவியத்தில் வரும் சகுந்தலையின் தந்தை ஆவார்.

சூரியனின் பிரதான சீடராக கருதப்படுபவர் யக்ஞவல்கியர்.

இவரது முதன்மை சீடராக திகழ்ந்தவர்தான் கண்வமகரிஷி ஆவார்.

சூரியனின் தலம் என்பதால் இந்த மகரிஷி இந்த தலத்தில் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இவருக்கு ஞாயிறு திருத்தலத்தின் கருவறைக்குள் ஜீவசமாதி இருப்பதாக ஒருசாரார் கூறுகிறார்கள்.

ஆனால் மற்றொரு சாரார் கண்வமகரிஷி ஜீவசமாதி சூரிய தீர்த்தம் குளத்துக்குள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இதில் மாறுபட்ட தகவல்கள் இருந்தாலும் கண்வமகரிஷி இந்த தலத்தில்தான் ஒடுங்கி இருக்கிறார் என்பது உறுதியாகிறது.

கண்வமகரிஷியை வழிபட்டால் பல் தொடர்பான நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.

இவரை பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News