ஆன்மிக களஞ்சியம்

பிரம்மாவின் சாபம் நீங்கிய தலம் - ஆயுள் அதிகரிக்கும் மகிமை

Published On 2024-05-20 16:49 IST   |   Update On 2024-05-20 16:49:00 IST
  • பிரம்மனும் நாடெங்கிலும் சுற்றித் திரிந்து அங்கங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
  • பின்பு பிடவூராகிய இத்தலம் வந்து 12 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து விட்டார்.

தமிழ்நாட்டில் எத்தனையோ சிவாலயங்கள் உள்ளன.

இவற்றில் சில தலங்களுக்கு மட்டுமே அற்புதங்களை நம் கண் எதிரில் நடத்தி காட்டும் ஆற்றல் உண்டு.

அந்த ஆற்றல் நிரம்பிய தலமாக திருப்பட்டூர் தலம் திகழ்கிறது.

நமது தலைவிதியை மாற்றும் சக்தி இத்தலத்துக்கு உள்ளது. நினைத்தவுடன் எல்லோராலும் இத்தலத்துக்கு சென்று வந்துவிட முடியாது.

ஈசனும், பிரம்மனும் மனம் வைத்தால் தான் நாம் இத்தலத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடியும்.

இத்தலத்தின் வரலாறும் அதைத்தான் பிரதிபலிக்கிறது.

அற்புதங்கள் நிறைந்த திருப்பட்டூர் தலம் தோன்ற காரணமான வரலாறு வருமாறு:

சிவனிடம் இருந்து இந்த உலகை படைக்கும் ஆற்றலை பிரம்மா பெற்றார்.

இதனால் பிரம்மனுக்கு கர்வம் ஏற்பட்டது.

சிவனைப்போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருத வேண்டும் என்று ஆணவம் கொண்டார்.

பிரம்மாவிற்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்றைக் கிள்ளி துண்டித்து கொய்து விட்டார்.

பிரம்மாவின் படைப்புத் தொழிலையும் சிவன் பறித்து விட்டார்.

அதன்பிறகே பிரம்மாவுக்கு தான் செய்தது தவறு என்று புரிந்தது.

அவர் இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

பூலோகத்தில் ஆங்காங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தன்னை வழிபடுமாறும், தகுந்த நேரமும், இடமும் வரும்போது சாப விமோசனம் தருவதாகவும் சிவபெருமான் பிரம்மாவிற்கு கூறினார்.

இந்த நிலையில் திருப்பட்டூர் தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதச லிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.

மேலும் பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத் தொழிலை அருள்வதாக கூறினார்.

பிரம்மனும் நாடெங்கிலும் சுற்றித் திரிந்து அங்கங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

பின்பு பிடவூராகிய இத்தலம் வந்து 12 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து விட்டார்.

பிரம்மனின் வழிபாட்டில் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இத்தலத்தில் சாப விமோசனம் அளித்து மீண்டும் பிரம்மாவிடம் படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலையும் வழங்கினார்.

பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பரம்பொருளான ஈசனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.

அப்போது முதல் 'என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக' என வரமும் கொடுத்தார்.

அன்று முதல் பிரம்மா தன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் நல்ல செயலைத் தொடங்கினார்.

எனவே இத்தலத்துக்கு வந்து பிரம்மனை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை பிரம்மன் மாற்றி அவர்களது ஆயுளை அதிகரிக்க செய்து அருள்புரிந்து வருகிறார்.

Tags:    

Similar News