ஆன்மிக களஞ்சியம்

அபரிமிதமான சக்தி கொண்ட கோரக்கர் பீடம்

Published On 2025-11-08 11:15 IST   |   Update On 2025-11-08 11:16:00 IST
  • தமிழகத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி கோவிலில் துறவிகள் குவிந்து இருப்பது இங்கு மட்டுமே.
  • கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிமிதமான சக்தி உண்டு.

ஒரு இடத்தில் ஒரு சித்தர் ஜீவசமாதி அடைந்து இருந்தாலே அந்த இடம் அருள் அலைகள் நிரம்பிய இடமாக திகழும். சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் அடங்கி இருப்பார்கள். அத்தகைய இடங்களில் சித்தர்களின் அருள் பொங்கி வழியும்.

அதே சமயத்தில், ஒரே இடத்தில் அதிக அளவில் சித்தர்கள் முக்தி அடைந்து இருக்கிறார்கள் என்றால் அந்த இடம் எத்தகைய மகிமை வாய்ந்த புண்ணிய தலமாக இருக்கக்கூடும். சித்தர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த மகிமை புரியும். அந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம், வடக்கு பொய்கை நல்லூர் எனும் ஊர் ஆகும். இங்கு கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி பீடம் அமைந்துள்ளது.

இந்த ஜீவசமாதிக்கு நாம் எப்போது சென்றாலும் முன்பகுதியில் காவி உடை அணிந்த சிவனடியார்கள் நூற்றுக்கணக்கில் நிறைந்துள்ளதை பார்க்கலாம். தமிழகத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி கோவிலில் துறவிகள் குவிந்து இருப்பது இங்கு மட்டுமே.

அந்த துறவிகளில் பலர் நிரந்தரமாகவே கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் தங்கி உள்ளனர். ஆசிரமத்தின் உள்ளே நுழையும்போதே ஏதோ ஓர் இனம்புரியாத அமைதி நமக்குள் ஊடுருவி விடுவதை நம்மால் உணர முடியும். அதிக அளவில் சித்தர்கள் முக்தி அடைந்த இடம் என்பதால் மனதுக்குள் வேறு சிந்தனைகளே வருவது இல்லை.

மனம் முழுக்க 'கோரக்கர் சித்தர்' நிறைந்து விடுகிறார். அங்கு அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தால் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிமிதமான சக்தி உண்டு.

ஒவ்வொரு வியாழக்கிழமை, பவுர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கோரக்கரை தரிசனம் செய்து இரவில் தங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News